PUBLISHED ON : அக் 14, 2024

ரினி: அர்ஜுன், நேத்து ஏன் டியூஷன் வரல?
அர்ஜுன்: நேத்து ஈவினிங் என் பேரன்ட்ஸ் ஸ்கின் டாக்டர் கிட்ட போயிட்டாங்க. அதான், நானும் அப்டியே ஜாலியா வீட்ல படம் பாத்துட்டு...
ரினி: ஓஹோ, அது சரி ஏன் ஸ்கின் டாக்டர்னு சொல்ற?
அர்ஜுன்: ஸ்கின்ல பிராப்ளம் இல்ல, ஏதாவது அலர்ஜினா அந்த டாக்டர் கிட்ட தானே போவோம். அதான் அப்படிச் சொன்னேன்.
ரினி: ஸ்கின் டாக்டர்னு சொல்லக்கூடாது. தோல் மருத்துவரைக் குறிப்பிட சரியான வார்த்தை 'டெர்மடாலஜிஸ்ட்' (Dermatologist).
அர்ஜுன் : ஆமாம்ல! இந்த வார்த்தை இருக்குல்ல! ஸ்கின் டாக்டர்னு சொல்லியே பழகிடுச்சுப்பா.
ரினி: டாக்டர் என்று ஒரு வார்த்தையில் நாம சொன்னாலும், அவங்களுக்குத் துறையில் தங்கள் பிரிவுக்கேற்றபடி பெயர் உண்டு. கீழே உள்ள மருத்துவர்களின் பெயரை ஆங்கிலத்தில் கண்டுபிடிங்க பார்க்கலாம்!
1. இதய நல மருத்துவர்2. பெண்கள் நல மருத்துவர்
3.குழந்தைகள் நல மருத்துவர்
4. மனநல மருத்துவர்
5. புற்றுநோய் மருத்துவர்
6. பல் மருத்துவர்
7. கண் மருத்துவர்
8. எலும்பு நல மருத்துவர்
9. மயக்க மருந்து நிபுணர்
10. விலங்குகள் மருத்துவர்
விடைகள்:
1.Cardiologist,
2. Gynecologist,
3. Pediatrician,
4. Psychiatrist,
5. Oncologist,
6. Dentist,
7. Ophthalmologist,
8. Orthopedist ,
9. Anesthesiologist,
10. Veterinary physician.