sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

பயிர் வயல் தெரியும்; அது என்ன பனிவயல்?

/

பயிர் வயல் தெரியும்; அது என்ன பனிவயல்?

பயிர் வயல் தெரியும்; அது என்ன பனிவயல்?

பயிர் வயல் தெரியும்; அது என்ன பனிவயல்?


PUBLISHED ON : ஜன 16, 2017

Google News

PUBLISHED ON : ஜன 16, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எந்தவித முயற்சியும் இன்றி ஒரு பகுதியில் தானாகவே வளரும் தாவர வகையை இயற்கைத் தாவரம் என்பர். இந்தியாவின் காணப்படும் தாவரங்களை, அவற்றின் பரவல் அடிப்படையில் ஆறு வகைகளாகப் பிரிக்கலாம்.

200 செ.மீ.

பசுமை மாறாக் காடுகள்


இந்தியாவில், 200 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் பகுதிகளில் இந்தக் காடுகள் அமைந்துள்ளன. இங்கே ஆண்டு முழுவதும் பசுமையான இலைகளோடு கூடிய மரங்கள் காணப்படுகின்றன. இவை உயரமாக வளரக்கூடியவை. மழை அளவு குறையும் பகுதிகளில், பசுமை மாறாக் காடுகளுக்குப் பதிலாக ஈரமுள்ள இலையுதிர்க் காடுகள் காணப்படுகின்றன. அஸ்ஸாம், இமயமலையின் கிழக்குப் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகள், அந்தமான் தீவுகள் ஆகிய இடங்களில் இவை அமைந்துள்ளன. விலை உயர்ந்த எபோனி, தேக்கு, மூங்கில் போன்ற மர வகைகள் இந்தக் காடுகளில் காணப்படுகின்றன.

10-200 செ.மீ.

இலையுதிர்க் காடுகள்


இந்தியாவில் 10 முதல் 200 செ.மீ. வரை மழை அளவுள்ள பகுதிகளில் இலையுதிர்க் காடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள மரங்கள், வறண்ட பருவ காலங்களில் ஆவியாதலைத் தடுப்பதற்காக இலைகளை உதிர்த்துவிடுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுகளிலும், வட சமவெளியை ஒட்டி அமைந்த இமயமலையின் அடிவாரப் பகுதிகளிலும், தக்காணப் பீடபூமியின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. தேக்கு, சந்தனம், ரோஸ்வுட், மூங்கில் ஆகிய மரங்கள் இந்தக் காடுகளில் உள்ளன.

50-100 செ.மீ.

முட்புதர்க் காடுகள்


மழை அளவு 50 முதல் 100 செ.மீ. வரை உள்ள பகுதிகளில் முட்புதர்க் காடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள மரங்கள், புற்களைத் தின்னும் விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, கிளைகளிலும், தண்டுகளிலும் முள் அமைப்புகளைக் கொண்டுள்ளன. மாபல், கைர் ஆகியவை இங்குள்ள முக்கிய மரங்களாகும். இத்தகைய காடுகள் அதிக அளவில் ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.

250 செ.மீ.

மலைக்காடுகள்


இவை மலைச்சரிவுகளில் காணப்படுகின்றன. ஆண்டு முழுவதும் இங்கு மழை பொழியும். இவை மழைக்காடுகள் எனப்படுகிறது. மலைகளின் உயரத்திற்கு ஏற்றவாறு, வேறுபட்டுக் காணப்படுகின்றன. அயன மண்டலக் காடுகள் 900 மீட்டர் உயரம் வரை உள்ள சரிவுகளிலும், அகன்ற இலைக் காடுகள் 2,700 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளிலும், ஊசியிலைக் காடுகள் 2,700 முதல் 3,600 மீட்டர் உயரத்திற்கு இடைப்பட்ட சரிவிலும் அமைந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக, 4,800 மீட்டர் உயரம் வரை ஆல்பைன் காடுகளும், 4,800 மீட்டர் உயரத்திற்கு மேல் பனி வயல்களும் அமைந்துள்ளன. பனி வயல்களில் தாவரங்கள் காணப்படுவதில்லை.

-25 செ.மீ.

பாலைவனத் தாவரங்கள்


மிகக் குறைவாக, -25 செ.மீ. மழை அளவு உள்ள பகுதிகளில் பாலைவனத் தாவரங்கள் காணப்படுகின்றvன. தார் பாலைவனத்தின் எல்லைப்பகுதி, தக்காணப் பீடபூமியின் சில பகுதிகளிலும், இவை உள்ளன. சப்பாத்திக் கள்ளி, சிரோபடிக் ஆகிய மர வகைகள் நன்கு வளர்கின்றன. இந்தத் தாவரங்கள் உறிஞ்சும் நீரை அதிக நாட்கள் வரை தக்க வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட அளவு பயன்படுத்தக்கூடியவை.

50 செ.மீ.

மாங்குரோவ் காடுகள்


கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய ஆற்றுச் சதுப்பு நில டெல்டாக்களில் சதுப்புநிலக் காடுகள் காணப்படுகின்றன. இந்தக் காடுகள் சுந்தரவனக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இங்கு மரங்கள் குட்டையாகவும், அவற்றின் வேர்கள் நீருக்கு மேல் தோன்றும்படியாகவும் அமைந்துள்ளன. இமயமலையின் அடிவாரத்தில் உள்ள தராய் காடுகளும் இந்த வகையைச் சார்ந்தவையே.






      Dinamalar
      Follow us