sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சோகத்தை வெளியில் காட்ட நெஞ்சில் அடித்து அழும் சிம்பன்சிகள்

/

சோகத்தை வெளியில் காட்ட நெஞ்சில் அடித்து அழும் சிம்பன்சிகள்

சோகத்தை வெளியில் காட்ட நெஞ்சில் அடித்து அழும் சிம்பன்சிகள்

சோகத்தை வெளியில் காட்ட நெஞ்சில் அடித்து அழும் சிம்பன்சிகள்


PUBLISHED ON : டிச 26, 2016

Google News

PUBLISHED ON : டிச 26, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகம் முழுவதும் உள்ள, 'சிம்பன்சி' (Chimpanzee) என்னும் மனிதக் குரங்கு இனங்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், 'டேம் ஜேன் குட்ஆல்' (Dame Jane Goodall). தொல் உயிரியியல் ஆராய்ச்சியாளர். சிம்பன்சி பற்றிய இவரது ஆராய்ச்சி உலக அளவில் பிரபலமானது. தொடர்ந்து, 55 ஆண்டுகள் சிம்பன்சி பற்றி ஆய்வு செய்து வருகிறார். அவற்றைப் பாதுகாக்க முயற்சியும் எடுத்துள்ளார்.

சிம்பன்சி குரங்குகளின் சமூக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, அறிவு, உணர்ச்சி ஆகியவற்றை பற்றி டேம் ஜேன் ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டு உள்ளார்.

அவர் கண்டறிந்தவை:

* சிம்பன்சி, மனிதர்களைப் போன்ற நடத்தைகள் கொண்டவை

* சிரிக்கவும், அழவும் செய்கின்றன

* புற்றுகளில் உள்ள கரையான்களை, சிறு குச்சிகளைப் பயன்படுத்தி, பிடித்து உண்கின்றன.

* மரக்குச்சியை உடைத்து, அதன் இலைகளை அகற்றிவிட்டு குச்சியைப் பயன்படுத்துகின்றன.

* மரபணுக்கள் 98 சதவீதம், மனித நடத்தையை அடிப்படையாகக் கொண்டுள்ளன

* இறந்த குரங்குகளைப் பார்த்து, நெஞ்சில் அடித்து அழுகின்றன

* கடுமையான மழையின் போதும், காற்றின் போதும் ஆக்ரோஷமாக ஆடுகின்றன

* இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்கின்றன

* குழு மனப்பான்மை கொண்டவை

டேம் ஜேன், ஆண்டுக்கு 300 நாட்கள் வரை, 'சிம்பன்சி' பற்றிய ஆய்வுக்காகவே செலவழித்துள்ளார். 'சிம்பன்சி' குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்; ஆவணப்படங்களையும் எடுத்துள்ளார்.

தொல் உயிரியியலாளர் லூயிஸ் லீக்கி (Louis Leakey) என்பவரின் செயலாளராகப் பணிபுரிந்தார். ஆப்பிரிக்கா, தான்சானியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய சிம்பன்சி சரணாலயம் 'கோம்பே ஸ்ட்ரீம் தேசிய பூங்கா' (Gombe Stream National Park - கோம்பே ஸ்ட்ரீம் நேஷனல் பார்க்) இயக்குநராக பணிபுரிந்தவர். காங்கோவில், சிம்பன்சி, கொரில்லா, பிற குரங்கு இனங்கள் கொல்லப்படுவதைக் கண்டித்துள்ளார். உயிர்ச்சூழல் குறித்த சிறப்பான பணிகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்கான தூதுவராக 2002ல் நியமனம் செய்யப்பட்டார்.

இவரது இணைய தளம்: www.janegoodall.org/

டேம் ஜேன் குட்ஆல் (Dame Jane Goodall) உயிர் விலங்கியல் ஆராய்ச்சியாளர் இங்கிலாந்து

ஜேன் குட் எழுதிய சில புத்தகங்கள்

* மூர்க்க சிம்பன்சிகள் எனது நண்பர்கள் (My Friends the Wild Chimpanzees) (1969)

* விலங்குகள், அவற்றின் உலகம் மீதான நம்பிக்கை (Hope for Animals and Their World) (2009)

* நம்பிக்கை விதைகள் (Seeds of Hope) (2013) சிறுவர்களுக்கான புத்தகங்கள்

* சிம்பன்சிகளுடன் எனது வாழ்க்கை (My Life with the Chimpanzees) (1988)

* ஜேன் குட் ஆலின் விலங்கியல் உலகம் (Jane Goodall's Animal World) (1989)

* நான் விரும்பும் சிம்பன்சிகள் (Chimpanzees I Love) (2001)

- கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us