PUBLISHED ON : நவ 28, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கியூபாவில் புரட்சியை வழிநடத்தியர், ஃபிடல் காஸ்ட்ரோ. அந்த நாட்டில், 49 ஆண்டுகள், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர். இவர், முதுமையின் காரணமாக, கடந்த 2008ல், ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகினார். தனது, சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடந்த ஆகஸ்டில் அவருடைய 90 வது பிறந்த தினத்தை, கியூபா நாட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். கடந்த சில நாட்களாக, அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சனிக்கிழமை அவர் காலமானார். இதை, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு, பல நாடுகளின் தலைவர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

