PUBLISHED ON : நவ 28, 2016
உலக அதிசயங்களில் ஒன்றான, ஈஃபிள் டவரின் இரும்பு படிக்கட்டுகள், 36 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ளது ஈஃபிள் டவர். உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த, 1887ல் தொடங்கி, 1889ல் இது கட்டி முடிக்கப்பட்டது; 324 மீட்டர் உயரம் கொண்டது. முழுக்க இரும்பினால் கட்டப்பட்டது. 1983ல் இதில், 'லிஃப்ட்' வசதி செய்யப்படவில்லை. அதனால், படிக்கட்டுகள் இருந்தன. பின்னர், லிப்ஃட் வசதி செய்யப்பட்டதால், அங்கிருந்த இரும்பிலான படிக்கட்டுகள், 24 பாகங்களாக வெட்டி எடுக்கப்பட்டன. அவை, பாரிசில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
கடந்த, 1983-ம் ஆண்டில் இருந்து, அவற்றை ஏலத்தில் விற்று வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஏல விற்பனையில், 14 இரும்பு படிக்கட்டுகள், இந்திய மதிப்பில், 36 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தை நடத்திய அதிகாரி கூறுகையில், 'தொலைபேசி மூலமாகவும் ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவியது' என்றார்.

