
பிப்ரவரி 20, 2007 - உலக சமூக நீதி நாள்
உலகில் இனம், மதம், கலாசாரம் போன்றவற்றில் இருக்கும் பாகுபாடுகளைக் களைய வேண்டும். ஏழ்மை, வேலைவாய்ப்பின்மையை ஒழிப்பதற்கான நியாயங்களைக் கேட்டு நீதி வழங்க வேண்டும் என்கிற நோக்கில், இந்த நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
பிப்ரவரி 21, 1894 - சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பிறந்த நாள்
இந்திய இயற்பியலாளர். இந்தியாவில் ஆய்வு மையங்கள் தோன்றக் காரணமானவர். பெட்ரோலியக் கழிவுகளைப் பயன்படு பொருளாக மாற்றுவதற்கு, வழிமுறைகள் கண்டறிந்தார். இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதைப் பெற்றிருக்கிறார்.
பிப்ரவரி 21, 1999 - அனைத்துலக தாய்மொழி நாள்
1952ல், அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில், வங்காள மொழியை அரசு நிர்வாக மொழியாக ஆக்கக்கோரி, போராட்டம் நடந்தது. அதில் உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக, இந்த நாளை யுனெஸ்கோ அறிவித்தது.
பிப்ரவரி 22, 1857 - பேடன் பவல் பிறந்த நாள்
மாணவ, மாணவியருக்கு நற்புண்புகளை வளர்க்க சாரணர் இயக்கத்தை உருவாக்கினார். பிரிட்டன் ராணுவப் பணியில் ஏற்பட்ட அனுபவங்களால், 20 மாணவர்களைக் கொண்டு ஆரம்பித்தார். அதன்பிறகு பல நாடுகளுக்கும் பரவி, இன்று உலகளாவிய பேரியக்கமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
பிப்ரவரி 22, 1732 - ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாள்
நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவர். அமெரிக்க சுதந்திரப் போரில் தலைமைப் பொறுப்பேற்று வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். அமெரிக்காவின் முதல் அதிபராக, 1789 முதல் 1797 வரை பதவி வகித்தார். டாலர் நோட்டுகள், நாணயங்களில் இவரது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 23, 1965 - மைக்கேல் டெல் பிறந்த நாள்
டெல் என்கிற கணினி நிறுவனத்தின் தலைவர். 15 வயதில் ஆப்பிள் கணினியைக் கழற்றி, பொருத்தி வடிவமைப்பு குறித்தும், வர்த்தக ரீதியாகவும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார். 27 வயதில் மிகவும் இளமையான தலைமை செயல் அதிகாரி என்று ஃபார்ச்சூன் இதழால் பெருமைப்படுத்தப்பட்டார்.
பிப்ரவரி 24, 1948 - ஜெ. ஜெயலலிதா பிறந்த நாள்
தமிழக முன்னாள் முதல்வர். திரைப்பட நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர். முதலமைச்சராக 1991-1996, 2001 (மே - செப்டம்பர்) 2002 - 2006, 2011 - 2014, 2015 - 2016 டிசம்பர் வரை முதலமைச்சராக பணிபுரிந்தார். தமிழக சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.

