sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

பேராசை குரங்கு

/

பேராசை குரங்கு

பேராசை குரங்கு

பேராசை குரங்கு


PUBLISHED ON : பிப் 20, 2017

Google News

PUBLISHED ON : பிப் 20, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அது ஒரு பெரிய காடு. அந்தக் காட்டில் புலி, சிங்கம், கரடி, முயல், நரி, மான் என ஏராளமான விலங்குகள் இருந்தன. காட்டை திறம்பட நிர்வாகம் செய்யவும், விலங்குகள் பிரச்னை இன்றி ஒற்றுமையாக வாழவும், தங்களுக்கு ஒரு தலைவர் வேண்டும் என நினைத்தன. சிங்கத்தைக் காட்டிற்கு ராஜாவாக தேர்ந்தெடுத்தன. ராஜா என்றால், அதற்கான மதிப்பு மரியாதை வேண்டும் அல்லவா! அதற்காக விலங்குகள் யாவும் ஒன்று கூடி, விவாதம் செய்தன.

அதன்படி, காட்டில் மலரும் பூக்களைத் தினமும் மாலையாகத் தொடுத்து, சிங்க ராஜாவுக்கு கொடுப்பது என்று முடிவு செய்தன.

அந்த மாலையை அணிந்து கொண்டுதான் ராஜா வலம் வரவேண்டும். நீதி விசாரணைகள் செய்ய வேண்டும். ஆட்சி நடத்த வேண்டும். இரவானதும் மாலையை ராஜா கழற்றி வைத்துவிடலாம் என்று கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஒட்டுமொத்த விலங்குகளின் இந்த முடிவுக்கு, சிங்க ராஜா ஒப்புதல் அளித்தது. மனம் உவந்து ஏற்றுக் கொண்டது. சிங்கத்துக்கு தினமும் பூக்களைப் பறித்து கொடுக்க வேண்டியது பறவைகளின் வேலை. கொடிகளில் இருந்து நார் எடுத்து வருவது அணிற் பிள்ளைகளின் வேலை. பூக்களை மாலையாகத் தொடுக்க வேண்டியது முயல் குட்டிகளின் பணி.

அதை ஒரு மூங்கில் கூடையில் வைத்து, ராஜாவிடம் கொடுக்க வேண்டியது குரங்கின் வேலை.

ராஜாவிற்குத் தேவையான உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது கரடியின் வேலை. தண்ணீரை எடுத்து வருவது யானைகள். காட்டில் அன்னியர்கள் யாரேனும் நுழைகிறார்களாக என்பதை வேவு பார்ப்பதற்கு நரிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இப்படி, ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

சிங்கம், விலங்குகளுக்குள் சண்டை வராமல் பார்த்துக்கொண்டது. காட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டது.

தண்ணீர் இல்லாத காலங்களில், விளைநிலங்களுக்குச் சென்று மனிதர்களிடம் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று மான் குட்டிகளுக்கு அறிவுரை சொன்னது. பன்றிகளிடம் சொல்லி காட்டில் குளங்கள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தது.

இப்படி அவரவர் திறமையை கண்டறிந்து, நல்ல நிர்வாகம் செய்தது, சிங்கம்.

எந்த இடையூறும் இன்றி, காட்டில் நல்லாட்சி நடந்து வந்தது.

சிங்கத்துக்குத் தினமும் மாலையைக் கொண்டு போய் கொடுக்கும் குரங்கிற்கு மட்டும் அந்த மாலை மீது ஆசை வந்தது. அதை தன் கழுத்தில் போட்டுக்கொண்டால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைத்தது. தானே ஒரு நாள் ராஜாவானால் என்ன என்ற நினைப்புக் கூட வந்தது. குரங்கின் 'தன் நினைப்பு' எதுவுமே வெளியில் தெரியாமல் பார்த்துக்கொண்டது.

காலம் சுழன்றது. சிங்கம் ஒரு நாள் நோய்வாய்ப்பட்டது. அதனால் நிர்வாகத்தை கவனிக்க முடியவில்லை. அது தன் சார்பாக, தனக்கு அடுத்த பொறுப்பில் இருந்த புலியிடம் மாலையைக் கழற்றிக்கொடுத்து 'இனி புலிதான் இந்தக் காட்டுக்கு ராஜா. நீங்கள் அனைவரும் புலிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என்று கூறி, உயிர் விட்டது.

சிங்கம் கைகாட்டிய புலியை, விலங்குகள் யாவும் ராஜாவாக ஏற்றுக்கொண்டன. ஆனால், குரங்கால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது, புலி கழுத்தில் இருந்த மாலையை தாவி பிடித்து இழுத்தது. தனக்கே அது வேண்டும் என்றது. நான்தான் ராஜா என்று பேராசையுடன் கத்தியது.

குரங்கின் செய்கை, மற்ற விலங்குகளுக்கு அதிர்ச்சி அளித்தது. காட்டில் குழப்பம் விளைவிக்க நினைத்தது, திடீரென்று பதவிக்கு ஆசைப்பட்டது, ராஜா கழுத்தில் இருந்த மாலையை பிய்த்து சேதப்படுத்தியது போன்ற காரணங்களுக்காக, குரங்கைப் பிடித்து மூங்கில் கூண்டில் அடைத்தன விலங்குகள்.

சுதந்திரமாகச் சுற்றி, மரங்களில் கிடைத்த பழங்களைப் பறித்து, தன் விருப்பம்போல் சாப்பிட்டுக்கொண்டிருந்த குரங்கு, கூண்டிற்குள் அடைபடவேண்டிய நிலை ஏற்பட்டது.

குரங்கின் பேராசைதான், அதனுடைய இந்த நிலைமைக்குக் காரணம் என, மற்ற விலங்குகள் பேசிக்கொண்டன.

இ.எஸ்.லலிதாமதி






      Dinamalar
      Follow us