தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஏப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்ரல் 11, 1869: கஸ்தூரிபா காந்தி பிறந்த நாள்

மகாத்மா காந்தியின் வாழ்க்கைத் துணைவி. அவருடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார். இந்திய விடுதலைப் போரில் பங்குபெற்று, பலமுறை சிறை சென்றார்.

ஏப்ரல் 12, 2011: உலக விண்வெளி நாள்

ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின், 1961, ஏப்ரல் 12ல் முதல் மனிதனாக விண்வெளிக்குச் சென்று பூமியை 1 மணி 48 நிமிடத்தில் சுற்றி வந்தார். இந்த விண்வெளிப் பயணம் நிகழ்ந்து 50 ஆண்டுகள் பூர்த்தி அடைந்ததன் நினைவாக, இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 14, 1891: அம்பேத்கர் பிறந்த நாள்

நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக இருந்தார். தீண்டாமையை ஒழிக்கப் போராடினார். இந்திய அரசியலமைப்புச் சாசன வரைவுக் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றார். 1990ல், நாட்டின் குடிமகன்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது.

ஏப்ரல் 15, 1452: லியனார்டோ டாவின்சி பிறந்த நாள்

புகழ்பெற்ற இத்தாலி நாட்டுக் கட்டடக் கலைஞர். சிற்பி, ஓவியர் என பல்துறை மேதையாக இருந்தார். 'கடைசி விருந்து', 'மோனலிசா' உள்ளிட்ட இவருடைய ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.

ஏப்ரல் 15, 1469: குரு நானக் தேவ் பிறந்த நாள்

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர். பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு. சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மிக தளத்தை உருவாக்கினார்.

ஏப்ரல் 16, 1867: வில்பர் ரைட் பிறந்த நாள்

அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். ஆர்வில் ரைட் என்கிற தனது சகோதரருடன் சேர்ந்து விமானத்தைக் கண்டறிந்தார். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாக இது கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் 'ரைட் சகோதரர்கள்' என்று அறியப்படுகிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us