தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/சிரிப்பால் அழுகையை மறைத்தவர்

சிரிப்பால் அழுகையை மறைத்தவர்

சிரிப்பால் அழுகையை மறைத்தவர்


PUBLISHED ON : ஏப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சார்லி சாப்ளின் - 16.04.1889 - 25.12.1977

அவனும், அவனுடைய தாயாரும், கலை அரங்குகளில் பாடல் பாடி நடித்தால்தான், மொத்தக் குடும்பமுமே உயிர்வாழ முடியும் என்ற துயரநிலை. ஒருமுறை அவனது தாயாரால் பாட முடியாமல் போக, அவன் பாடத் தொடங்கினான். அவன் பாடிய பாடலைக் கேட்ட ரசிகர்கள், காசை அள்ளி வீசினர். அப்படி வீசப்பட்ட காசுகளை எடுப்பதும், பிறகு பாடுவதுமாக இருந்த அவனது செய்கை, அத்தனை பேரையும் சிரிக்க வைத்தது. அந்தச் சிரிப்புக்குப் பின்னால், அவன் அழுது கொண்டிருந்தது யாருக்கும் தெரியாது. அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகையே சிரிக்க வைத்த, சார்லி சாப்ளின்.

லண்டனில் ஏழைக் குடும்பத்தில் சாப்ளினின் இளைமைக்காலம் இனிமையானதாக இல்லை. சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயுடன் வளர்ந்தார். அவரது தாயும் மனநிலை பிறழ்வு நோயில் பாதிக்கப்பட்டு இருந்தார். பசியும் வறுமையும் சாப்ளினை வாட்டின. பல துன்பங்களைக் கடந்த சாப்ளினுக்கு, 14 வயதில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் நடிக்க ஒரு சிறு வாய்ப்புக் கிடைத்தது. அதுதான் ஆரம்பம். அதன்பிறகு, உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களின் எழுத்துகளை வாசித்து, அவற்றை திரையில் கொண்டு வந்தார்.

ஓரளவு வளர்ந்ததும், அமெரிக்கா சென்று நாடகக் குழுவில் சேர்ந்து புகழ்பெற்றார். அதன்பிறகு, 1914ல் 'டிரெம்ப்' (TRAMP) படத்தில், நாடோடியாக நடித்து ரசிகர்களின் மனதை ஆட்கொண்டார். இறுக்கமான கோட், பெரிய சைஸ் பேன்ட், டூத்பிரஷ் மீசை, கிழிந்த தொப்பி, பொருத்தமில்லாத காலணி, வாத்து நடை என, அந்த வேடத்திலேயே தொடர்ந்து 25 ஆண்டுகள் நடித்து, உலக மக்களை மகிழ்வித்தார்.

அவருக்கு 1972ல், சிறப்பு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. நமது இந்திய அரசாங்கம் அவரது தபால் தலையை வெளியிட்டு, மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செய்தது.

புகழ்பெற்ற படங்கள்:

டிரெம்ப் (Tramp)

தி கிட் (The Kid)

கோல்ட் ரஷ் (Gold Rush)

சர்க்கஸ் (Circus)

சிட்டி லைட்ஸ் (City Lights)

மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

தி கிரேட் டிக்டேட்டர் (The Great Dictator)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us