உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 18, 2019

அ நிறம் | அளவு
டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆசிய -ஓசியானா குரூப்-1 பிரிவில், இந்தியா - -பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. செப்டம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு பிரச்னை காரணமாக மாற்றப்பட்டது. நவம்பர் 29, 30
தேதிகளில் நடைபெற உள்ள இப் போட்டிக்கான இந்திய அணியை, அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. இதில் மூத்த வீரரான லியாண்டர் பயஸ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். விளையாடாமல் வெளியில் இருந்து அணியை வழிநடத்தும் கேப்டனாக இருந்த மகேஷ்பூபதிக்கு இடம் கிடைக்கவில்லை.
அணி விவரம்
சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், சசிகுமார் முகுந்த், சாகேத் மைனெனி, ரோஹன் போபண்ணா, லியாண்டர் பயஸ், ஜீவன் நெடுஞ்செழியன், சித்தார்த் ராவத்.
