தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி!

தேதி சொல்லும் சேதி!

தேதி சொல்லும் சேதி!


PUBLISHED ON : நவ 18, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 18, 1923 - ஆலன் ஷெப்பர்ட் பிறந்த நாள்

விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதர்; முதல் மனிதர் அமெரிக்கர். மெர்க்குரி விண்கலத்தில் பயணம்செய்து 15 நிமிடங்கள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்தார். அப்பல்லோ 14 விண்கலத்தில் சென்று, நிலவிலும் இறங்கியவர்!

நவம்பர் 19, 1917 - இந்திரா காந்தி பிறந்த நாள்

இந்தியாவின் மூன்றாவது மற்றும் முதல் பெண் பிரதமர்; நேருவின் மகள். கல்வி முறையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதிரடியான ஆட்சி முறையால் 'இரும்புப் பெண்மணி' என பெயர் பெற்றார்.

நவம்பர் 21, 1996 -உலகத் தொலைக்காட்சி நாள்

உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள், கலை, கலாசாரம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதற்காக, ஐ.நா. சபையால் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

நவம்பர் 20, 1889 - எட்வின் ஹப்பிள் பிறந்த நாள்

அமெரிக்க வானியலாளர். 'பிரபஞ்சம் முழுமையும் விரிவடைகிறது' என்றார். இது, 'ஹப்பிள் விதி' என அழைக்கப்படுகிறது. நவீன விண்வெளித் தொலைநோக்கிக்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளனர்.

நவம்பர் 23, 1921 - கவிஞர் சுரதா பிறந்த நாள்

உவமைக் கவிஞர். இயற்பெயர் ராஜகோபாலன். பாவேந்தர் சுப்புரத்தின தாசனின் பெயரைச் சுருக்கி 'சுரதா' என மாற்றிக்கொண்டார். இவரது கவிதைகள் பள்ளி, பல்கலைக்கழகப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

நவம்பர் 24, 1859 - படிவளர்ச்சி நாள்

சார்லஸ் டார்வின், 'உயிரினங்களின் தோற்றம்' என்கிற நூலை 1859, நவம்பர் 24இல் வெளியிட்டார். இந்த நூல் வெளியிடப்பட்டதன் நினைவாக 'படிவளர்ச்சி நாள்' கொண்டாடப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us