உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 11, 2016

அ நிறம் | அளவு
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக மீன் வளம் குறைந்து வருகிறது என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் 'நாசா' தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில், வெப்பநிலை உயர்ந்து கடல் நீர் சூடாகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு 'எல் நினோ' (El Nino) என்று அழைக்கப்படுகிறது. பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பில் வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம்தான் எல் நினோ. El Nino- Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம். கடல் நீரின் வெப்பநிலை உயர்வதால் மீன்களுக்கு உணவாகும் தாவரங்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பது குறைந்து விடுகிறது. இதனால் மீன் வளம் குறைகிறது.
