sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தமிழ் வாசிப்பை மேம்படுத்தும் 'பட்டம்'

/

தமிழ் வாசிப்பை மேம்படுத்தும் 'பட்டம்'

தமிழ் வாசிப்பை மேம்படுத்தும் 'பட்டம்'

தமிழ் வாசிப்பை மேம்படுத்தும் 'பட்டம்'


PUBLISHED ON : பிப் 12, 2018

Google News

PUBLISHED ON : பிப் 12, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை கே.கே. நகரில் உள்ளது ஸ்ப்ரிங்ஃபீல்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி. அங்கே, கல்விக் கண்காட்சி நடக்கிறது என்ற செய்தி வந்தது. 'என்ன நடக்கிறது என ஒரு எட்டுப் பார்த்துவிடுவோமே' என்று உள்ளே நுழைந்தது பட்டம் குழு.

கணிதம், அறிவியல், மொழி என ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கூடங்கள். அவற்றை மாணவர்கள் அமைத்திருந்தார்கள். ஒவ்வொரு துறை சார்ந்த முக்கிய விஷயங்களும், மனம்கவரும் விதத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழ்மொழிக்கு தனிக்கூடம். உள்ளே நுழைந்தால், ஓர் இன்ப அதிர்ச்சி!

கூடம் முழுவதும் மாணவர்களின் அறிவியல் பார்வையை, கூர்மைப்படுத்தக்கூடிய தினமலர் நாளிதழின் இணைப்பிதழ்கள்! 'பட்டம்' இணைப்பிதழுக்கு பிரத்யேக பகுதி. 'பட்டம்' இதழில் என்னனென்ன விஷயங்கள் வெளிவருகின்றன என்பதைப் பார்வையாளர்களுக்கு மாணவர்கள் படுஉற்சாகமாக விளக்கிக்கொண்டிருந்தார்கள்.

'அறிவியல், வரலாறு, கணிதம், பொது அறிவு, பொழுதுபோக்கு என எக்கச்சக்கமான விஷயங்களைக் கண்கவரும் படங்களுடன் தினமலர் மாணவர் பதிப்பான 'பட்டம்' வழங்குகிறது. ஒரு விஷயத்தை முற்றிலும் படங்கள் மூலமாக விளக்கும் தகவல்படம் (இன்ஃபோகிராபிக்ஸ்) எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவரும் 'பட்டம்' இணைப்பிதழை நான் ஒவ்வொரு வாரமும் சேகரித்து வருகிறேன். எனக்கு அது பொக்கிஷம்.” என்றார் ௮ஆம் வகுப்பு மாணவி கீர்த்தனா.

பள்ளியின் தாளாளர் சங்கர்லால், 'எங்கள் பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக்கொள்ள 'பட்டம்' பேருதவியாக இருக்கிறது” என்றார். அவரது கூற்றை மெல்லிய புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்தார் பள்ளியின் தமிழாசிரியை ஸ்ரீபிரியா.

அவரிடம், “பட்டம் இதழ், தமிழ் வாசிப்பை எப்படி மேம்படுத்துகிறது?” என்ற கேள்வியை வைத்தோம்.

'ஒரு குழந்தையின் சிந்தனைமொழியாக தாய்மொழிதான் இருக்க முடியும். தாய்மொழியில் முறையாக எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால்தான், அந்தக் குழந்தையால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு, பிற பாடங்களை முறையாகக் கற்க முடியும். மாணவர்கள், எந்தவிதத் தடுமாற்றமும் இல்லாமல், சரளமாகத் தமிழ் வாசிப்பதை நான் ஊக்கப்படுத்தி வருகிறேன்.

பாடப் புத்தகங்கள் வாசிப்பதைக் காட்டிலும், பொதுஅறிவு விஷயங்களைப் படிக்கவே மாணவர்கள் அதிகம் விரும்புவார்கள். இந்த இடத்தில்தான் 'பட்டம்' மிகவும் உதவியாக இருக்கிறது.

பல்வேறு செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் மாணவர்கள் 'பட்ட'த்தை ஆர்வத்துடன் வாசிக்கிறார்கள். இதனால், மாணவர்களின் தமிழ் வாசிப்புத்திறனும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும் மேம்படுகிறது.” என்றார்.

மாணவர்கள் அறிவியல் துறைகளின் அடிப்படைகளை அறிந்துகொள்ளவும், சமூகம் சார்ந்த பார்வையை மேம்படுத்திக்கொள்ளவும் கல்வி அவசியம். மொழிஅறிவு பெற்றால்தான், மாணவர்களால் பள்ளிக் கல்வியை முறையாகக் கற்க முடியும். அதற்குத் தாய்மொழி அறிவு முக்கியமானது.

'பட்டம்' இதழ் இவர்களது நோக்கத்துக்குப் பயன்படுவது அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்துள்ளது.






      Dinamalar
      Follow us