sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

காந்திய வழியில் களப்பணி!

/

காந்திய வழியில் களப்பணி!

காந்திய வழியில் களப்பணி!

காந்திய வழியில் களப்பணி!


PUBLISHED ON : பிப் 12, 2018

Google News

PUBLISHED ON : பிப் 12, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''என் வேலையை நான் அமைதியான முறையில் செய்து வருகிறேன், என் தன்நிறைவுக்காக மட்டுமே நான் வேலை செய்கிறேன்” என்கிறார் காந்தியவாதியான லெண்டினா அஹோ தாக்கர் (Lentina Ao Thakkar). காந்திய வழியில் இவர் செய்து வரும் சேவையை அங்கீகரித்து இந்த ஆண்டு 'பத்மஸ்ரீ ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து பகுதியின் செல்லப்பாட்டி தான் லெண்டினா அஹோ தாக்கர். மக்கள் அனைவரும் இவரை உத்ஸூ (பாட்டி) என்றுதான் அழைக்கிறார்கள். காந்தியவாதியான காக்கா கலேக்கர் முதல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரை பலரும் இவருடைய தன்னலமற்ற சேவையைக் கண்டு வியந்திருக்கின்றனர்.

நினைத்திருந்தால், அரசாங்கத்தின் செல்வாக்கில் பெரிய அளவில் வாழ்ந்திருக்கலாம். ஆனால், இன்னும் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்கிறார். இவருடைய கணவரான நட்வர் தாக்கரும் ஒரு காந்தியவாதி என்பதால், இருவரும் இணைந்து சமூகத் தேவைகளை உணர்ந்து பலருக்கு உதவி வருகின்றனர்.

நாகாலாந்து பகுதியில் பல பிரச்னைகள் நடந்து வருகின்றன. அவற்றில் சிக்கிக் கொள்ளாமல், மக்களை வழிநடத்தி, பலருக்கு வாழ்க்கை அளித்திருக்கிறார். இவருடைய கிராமத்தில் ஏழாம் வகுப்பு வரை படித்த ஒரே பெண்மணி இவர்தான். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவருடைய ஊரில் அதற்கான வசதி வாய்ப்பு சுத்தமாக இல்லை. நெடுந்தூரம் பயணம் செய்து, வழியில் எங்காவது சமைத்து சாப்பிட்டு, பள்ளிக்குச் செல்வார்களாம்.

எப்படியாவது படிக்க வேண்டும் என ஆசை. அதனால், இவருடைய அண்ணா, இவரை அஸ்ஸாம் மாநில தலைநகரில் இருக்கும், கஸ்தூரி பாய் ஆசிரமத்திலுள்ள பயிற்சி வகுப்பில் சேர்த்தார். அங்கு பெற்ற பயிற்சியின் மூலம், எண்ணற்ற மக்களுக்கு உதவ முடிவெடுத்தார். அதன் பின், காந்திய வழியில் சமூக சேவை செய்ய ஆரம்பித்தார்.

இப்போது இவருக்கு வயது 84. இந்த வயதிலும் மக்களுக்காக கிராமம் கிராமமாகச் சென்று பிரசவம் பார்க்கிறார், மருத்துவ உதவி செய்கிறார். வடகிழக்கு மாநிலங்கள் என்றாலே நமக்கு பயம் உண்டாகும். எப்போதும் பதற்றமாக இருப்பது போலவே ஊடகங்களில் வரும் செய்திகள் நமக்கு உணர்த்தும்.

ஆனால், இவரைப் போல நம்பிக்கையான மனிதர்கள் அங்கு வாழ்கிறார்கள். கலவரப் பகுதிகளில் தான் காந்திய சிந்தனை தேவை. நெருக்கடியான இடத்தில் வாழ்ந்து, காந்திய முறையில் கடந்த 65 ஆண்டுகளாக மக்களுக்கான பணியில் ஈடுபட்டு வருகிறார் லெண்டினா அஹோ தாக்கர்.






      Dinamalar
      Follow us