தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உலகை மாற்றிய 'டீசல்'

உலகை மாற்றிய 'டீசல்'

உலகை மாற்றிய 'டீசல்'


PUBLISHED ON : மார் 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிப்பது கச்சா எண்ணெய். இதில் இருந்துதான் பெட்ரோல், டீசல் போன்ற பல எரிபொருட்கள் கிடைக்கின்றன. கனரக வாகனங்கள், கப்பல் போக்குவரத்து, மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள், கட்டமைப்புத் துறைகள் என டீசல் எரிபொருளின் பயன்பாடு மிக அதிகம்.

டீசல் வருவதற்கு முன், நிலக்கரியில் இயங்கும் இயந்திரங்கள்தான் புழக்கத்தில் இருந்தன. இந்த இயந்திரங்களின் திறன் மிகமிகக் குறைவு. இவற்றை இயக்குவதற்கும் அதிக அளவில் நிலக்கரி தேவைப்பட்டது. அதனால், மாற்று எரிபொருளில் இயங்கக்கூடிய இன்ஜின்களுக்கான தேவை இருந்தது.

கச்சா எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒருவித எண்ணெயைப் பயன்படுத்தி, ஜெர்மனியைச் சேர்ந்த ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) 1893ஆம் ஆண்டில் ஒரு இன்ஜினை வடிவமைத்தார். அந்த இன்ஜினுக்கு 'டீசல் இன்ஜின்' என்று பெயர் வந்தது. அதுமட்டும் இல்லாமல், அதில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்க்கும் 'டீசல்' என்ற பெயரே நிலைத்தது! இந்தக் கண்டுபிடிப்பு, தொழில்துறை வளர்ச்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

ருடால்ஃப் டீசல், பிரான்ஸில் 1858 மார்ச் 18ல் பிறந்தார். பள்ளிப் படிப்பை பிரான்சில் முடித்த பிறகு, ஜெர்மனியில் உள்ள ஆக்ஸ்பர்க் (Augsburg) தொழிற்கல்விக் கூடத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இயந்திரங்கள் பற்றிப் படித்தார்.

இன்ஜின்களின் திறனை அதிகரிப்பதற்காக, தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டார். அதன் விளைவாக 1886ஆம் ஆண்டில் டீசல் இன்ஜினை வடிவமைத்தார். பல நாடுகளில் இதற்கான காப்புரிமையும் பெற்று பெரிய பணக்காரர் ஆனார்.

டீசல் இன்ஜினில் சில தாவர எண்ணெய்களையும் எரிபொருளாகப் (பயோடீசல் - Biodiesel) பயன்படுத்த முடியும். அதற்குக்கூட 'டீசல்' என்ற பெயர்தான்!

உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பாகப் போற்றப்படும் டீசல் இன்ஜினை உருவாக்கிய டீசல், 55ஆவது வயதில் மறைந்தார். (29 செப்டம்பர், 1913)

* இந்தியாவில் பெட்ரோலைவிட, டீசல் விலை குறைவு.

* டீசல் அடர்த்தி அதிகம் என்பதால், எரிக்கப்படும்போது இன்ஜினில் அதிக புகை படிகிறது.

* பெட்ரோல் இன்ஜின், டீசல் இன்ஜின் தொழில்நுட்பங்கள் வேறுபட்டவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us