PUBLISHED ON : ஏப் 16, 2018
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய டிஜிட்டல் நம்பர் திரையை துபாய் போக்குவரத்துத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக துபாய் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “டிஜிட்டல் நம்பர் பிளேட் உதவியுடன் வாகனத்தின் நடவடிக்கைகளை எந்நேரமும் கண்காணிக்க முடியும். அதனால், அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்வது, மோசமான வாகன இயக்கம், முறையற்ற பார்க்கிங், முன்செல்லும் வாகனத்தை நெருக்கமாகப் பின்தொடர்வது போன்ற குற்றங்களைத் தடுக்க முடியும். தவறு செய்யும் ஓட்டுனர்களின் விவரங்கள் உடனடியாக எங்களுக்கு வந்துவிடும். விபத்துகள் ஏற்பட்டால், உடனே தெரிந்துகொண்டு, விரைவாக உதவலாம். மேலும் கார் திருட்டு போனாலும் அதை இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும். சோதனை ஓட்டம் முடிந்தபிறகு, 2019க்குள் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.” என்று தெரிவித்துள்ளார்.