PUBLISHED ON : ஏப் 16, 2018
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் வயதான மனிதராக ஜப்பானைச் சேர்ந்த மசாசோ நோனோக்கா பட்டம் சூட்டப்பட்டுள்ளார். இவர் வயது, 112. ஜப்பான் நாட்டில், கடந்த ஆண்டு, வயதானோர் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது, அங்கு 100 வயதைத் தாண்டிய முதியோர் 68 ஆயிரம் பேர் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அவர்களில் ஒருவரான மசாசோ நோனோக்கா என்பவருக்கு 112 வயது முடிந்து 8 மாதங்கள் ஆகியுள்ளது. அவர் 1905ஆம் ஆண்டு, ஜூலை 25இல் பிறந்தவர். இதையடுத்து, அவருக்கு கின்னஸ் அமைப்பாளர்கள், 'உலகின் வயதான மனிதர்' என்ற பட்டத்தைச் சூட்டி கௌரவித்தனர்.