உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 13, 2016

அ நிறம் | அளவு
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் கடந்த 2008 (வெண்கலம்), 2012 (வெள்ளி) ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர். கடந்த ஆண்டு நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் காயம் காரணமாக இவர் விலக, சக வீரர் நரசிங் யாதவ் 'ஃபிரீ ஸ்டைல்' 74 கி.கி. எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார். அதன் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். இந்த நிலையில், இருவருக்கும் தகுதிப்போட்டி நடத்தி வெல்பவரை ஒலிம்பிக்கிற்கு அனுப்ப வேண்டும் என, டில்லி ஐகோர்ட்டை சுஷில் குமார் நாடினார். இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், சுஷில் குமாரின் ஒலிம்பிக் கனவு கலைந்தது.
