உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 13, 2016

அ நிறம் | அளவு
ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் 'பார்முலா - 1' வீரர் மைக்கேல் சூமாக்கர். கடந்த 2013ல் ஆல்ப்ஸ் மலைச்சரிவில் ஏற்பட்ட விபத்தில் கோமா நிலைக்குச் சென்ற இவர், தற்போது மீண்டு வருகிறார். இவரது மகன் மைக் சூமாக்கர் (வயது 17), ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடந்த 'பார்முலா - 4' சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார். 'பிரெமா பவர்டீம்' அணி சார்பில் சீறிப் பாய்ந்த இவர், முதல் போட்டியில் 31 நிமிடம் 6.332 வினாடியில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். இதன் 2ஆவது போட்டியிலும் அசத்திய மைக், 25 நிமிடம் 11.460 வினாடியில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றார்.
