தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மழைத் தண்ணீரில் விளையாடாதீங்க!

மழைத் தண்ணீரில் விளையாடாதீங்க!

மழைத் தண்ணீரில் விளையாடாதீங்க!


PUBLISHED ON : நவ 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழை என்றாலே ஒருவித உற்சாகம் பலருக்கும் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, மாணவர்களுக்கு! விடுமுறையின் காரணமாகவும் இருக்கலாம். அதேநேரம் மழைக்காலம் என்றாலே நோய்த்தொற்றும் பரவும். வந்துவிட்டது மழைக்காலம்: ஆரோக்கியம் பேண என்ன செய்வீர்கள்? என கேட்டிருந்தோம். சிவகாசி, காரனேசன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் தங்களின் ஆலோசனைகளை வழங்கினார்கள்.

நா.லட்சுமி, 8ஆம் வகுப்பு

மழைக்காலத்தில் வரும் முக்கிய பிரச்னையே, ஜலதோஷம், வயிற்றுப்போக்கு, ஜுரம் தான். இதிலிருந்து தப்பிக்க, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வச்சுக்கணும். காய்ச்சிய நீரைத்தான் குடிக்கணும். காய்ச்சல் வந்தால் தள்ளிப்போடாமல் உடனடியாக மருத்துவரைப் பார்த்து, மருந்து மாத்திரை வாங்கிச் சாப்பிடணும். எல்லாவற்றையும் விட, வெளியே கண்டதையும் தின்று வயித்தைக் கெடுத்துக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கேன்.

தி.அழகுபாண்டீஸ்வரி, 11ஆம் வகுப்பு

மழைக் காலங்களில் கொசுவினால் பரவும் நோய்கள் அதிகம். அதனால பள்ளி, வீடு, தெருவுன்னு எங்கேயும் மழை நீர், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும். வேப்பெண்ணெயில் விளக்கு ஏற்றினால் கொசு வராதுன்னு சொல்றாங்க. எங்க வீட்டில் அப்படி ஏற்ற ஆரம்பிச்சுட்டோம்.

சே.கலைச்செல்வி, 8ஆம் வகுப்பு

சாப்பிடுவதற்கு முன்னாடியும், பின்னாடியும் கை கழுவிடுவேன். வெளியில எதுவும் வாங்கிச் சாப்பிடுவதில்லை. ஏன்னா அதுல ஈ மொய்த்திருந்தால் வாந்திபேதி வரும்னு எங்க மிஸ் சொல்லி இருக்காங்க. மழைக் காலங்களில் கண்டிப்பாக குடிதண்ணீரை காய்ச்சித்தான் குடிக்கணும். அது, வாட்டர் கேன் நீராகவே இருந்தாலும்! செருப்பு போடாம எங்கேயும் போகக்கூடாதுன்னு வீட்டில் சொல்லி இருக்காங்க. அதுமாதிரி, வெளியில் போயிட்டு, வீட்டுக்கு வந்ததுமே கை கால் கழுவிடுவேன்.

மு.பவித்ரா, 8ஆம் வகுப்பு

மழைக் காலங்களில் சிறிய காய்ச்சல் வந்தாலும், அதற்கு நாமே மருந்து எடுக்காமல் உடனடியாக டாக்டரைப் பார்த்து சிகிச்சை பெறணும். எந்த அளவிற்கு நாம் நமது இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அந்த அளவிற்கு, நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கணும்.

ஜி.கல்பனா, 8ஆம் வகுப்பு

எப்போதும் கையில் ஒண்ணுக்கு ரெண்டு கர்ச்சீப் வச்சிருப்பேன். ஊர் முழுக்க காற்று மாசும் தூசியும் இருக்கு. அதனால முகத்தில் ஒரு கர்ச்சீப் கட்டி இருப்பேன். தும்மல் ஏதாவது வந்தால் மற்றவர்களுக்கு அது ஒட்டிக்காமல் இருக்க, இன்னொரு கர்ச்சீப் பயன்படும். மழைநீர் தேங்காமல் ஓட, வழி ஏற்படுத்தணும் இல்லாவிட்டால் கொசு உற்பத்தியாகி, மலேரியா, டெங்கு எல்லாம் வந்துடும்.

வி.காயத்ரி, 11ஆம் வகுப்பு

வெளியில் சென்று வீட்டிற்கு வந்தவுடன் கை, கால்களை சுத்தமாகக் கழுவிடணும். பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால்தான் டெங்கு வருகிறது. அதனால நம்மைச் சுற்றிலும் உள்ள சூழ்நிலை சுத்தமாக இருக்க வேண்டும். அதுவும் அந்த கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகுமாம். அதனால் தண்ணீரை திறந்துவைக்கக்கூடாது. மூடிவைக்கணும். மழைத்தண்ணீர்ன்னு அதுல விளையாடக் கூடாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us