தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அபிஷேகம் என்பதன் தமிழ்ச் சொல் தெரியுமா?

அபிஷேகம் என்பதன் தமிழ்ச் சொல் தெரியுமா?

அபிஷேகம் என்பதன் தமிழ்ச் சொல் தெரியுமா?


PUBLISHED ON : ஜூலை 30, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2018


Follow on Google
அ நிறம் | அளவு

'அப' என்று தொடங்கும் சொற்கள் பலவும் வடசொற்களாகவே இருக்கின்றன. 'அப' என்பது எதிர்மறை பொருளைத் தரும் வடமொழி முன்னொட்டு. எந்தச் சொல்லோடு 'அப' முன்னொட்டுகிறதோ, அது எதிர்பொருளைத் தரும் சொல்லாகிவிடும். கீர்த்தி புகழ் என்றால், அபகீர்த்தி இகழ்ச்சியைக் குறிக்கும். தேவையற்ற வீண் வாதத்தை அபவாதம் என்பர்.

அபத்தம் என்றால் பொய். அபாண்டம் என்பது பெரும்பழி கூறுவதைக் குறிக்கும். அடைக்கலம் தருவதை அபயம் என்று வடமொழியில் சொல்கிறார்கள். அபவிருத்தி, அபிவிருத்தி என்று இருசொற்கள் இருக்கின்றன. அவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்பொருளைத் தருகின்றன. அபவிருத்தி என்பது குறைவைக் குறிக்கிறது. அபிவிருத்தி என்பது வளர்ச்சியைக் குறிக்கிறது.

ஒருவரிடம் கருத்துக் கேட்பதை அபிப்பிராயம் என்று கூறுகிறோம். ஒருவர் தன் உள்ளத்தில் நினைக்கிற கருத்துக்கு அபிப்பிராயம் என்று பெயர். ஒருவர் மீது கொண்டுள்ள பற்றுணர்ச்சி அபிமானம். மற்றும் உங்கள் அபிமான நடிகர் நடிகைகள் நடித்த படம் என்றுதான் முற்காலத்தில் திரைப்பட விளம்பரங்களில் எழுதினார்கள். நடித்தல் அபிநயம் ஆகும்.

அரிதினும் அரிதான ஒன்றை அபூர்வம் என்று சொல்கிறோம். அபாயம் என்பதும் வடசொல்தான். பேரிடர், இடுக்கண் என்பது அபாயத்திற்கு மாற்றான தமிழ்ச்சொற்கள். பயிற்சி என்ற சொல் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர், அப்பியாசம் என்ற வடசொல்லால் வழங்கி வந்தனர். தேகாப்பியாசம் என்றால் உடற்பயிற்சி.

கோவில்களில் தெய்வத் திருவுருவுக்கு நீராட்டு நடப்பதை அபிஷேகம் என்கிறார்கள். அபிஷேகம் என்பதைத் திருமுழுக்கு எனலாம். அபேட்சை என்பது வேட்பினைக் குறிக்கும். அதனால்தான் தேர்தலில் விரும்பிப் போட்டியிடுவோரை அபேட்சகர் என்றார்கள்.

திருட்டுத்தனமாய்ப் பறித்துக்கொள்வதை அபகரித்தல் என்பர். உதவிச்செயலை உபகாரம் என்பதைப்போல் தீச்செயலை அபகாரம் என்கின்றனர். அபிலாஷை என்றால் விருப்பம். ஒறுப்புக் கட்டணமாய்ப் பெறப்படுவது அபராதம்.

'ஆகா அபாரம்' என்று ஒன்றைப் பாராட்டுகிறோம். அபாரம் என்றால் அளவில்லாதது எனப் பொருள். ஒன்றின் அளவற்ற தன்மையைப் புகழும் சொல் அது. அபாரசக்தி என்றால் அளவில்லாத ஆற்றல்.

-- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us