PUBLISHED ON : செப் 11, 2023

அ நிறம் | அளவு
உலகின் வெகு சில நாடுகளிடம் மட்டுமே சொந்தமாக AESA ரேடார்கள் (AESA-Active Electronically Scanned Array) தயாரிக்கும் திறன் உள்ளது. இந்நிலையில், நம் நாடு உத்தம் AESA ரேடாரை உருவாக்கியது. இதன்மூலம், சொந்தமாக AESA ரேடார்களைத் தயாரிக்கும் வெகு சில நாடுகளில் நம் நாடும் இணைந்துள்ளது. இவை 100 கி.மீ. சுற்றளவில் ஒரே நேரத்தில் 50 இலக்குகளைக் கண்டறியும் திறன் பெற்றவை. இவை நமது போர் விமானங்களான சுகோய் 30 எம்.கே.ஐ., தேஜஸ், மிக் 29 ஆகியவற்றில் பெருத்தப்பட உள்ளன.
