தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/உணவே உயிரே அவகேடோ அறிவோம்

உணவே உயிரே அவகேடோ அறிவோம்

உணவே உயிரே அவகேடோ அறிவோம்


PUBLISHED ON : செப் 11, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவகேடோ பழங்கள் வட அமெரிக்காவின் மெக்சிகோவைத் தாயகமாகக் கொண்டவை. இவற்றின் அறிவியல் பெயர்- பெர்சியா அமெரிக்கானா(Persea americana). இவை காயாக வகைப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால், பழங்களைப் போலவே சதைப் பற்றுடன் பெரிய விதையைக் கொண்டுள்ளன. அதனால், தாவரவியல் முறைப்படி இவை பழங்களே.

இவை பெரும்பாலும் முட்டை, பேரிக்காயின் வடிவத்தையே ஒத்துள்ளன. இவை அடர்பச்சை நிறத்தில் இருக்கும். அறுவடைக்குப் பிறகு பழுப்பு நிறமாக மாறத் தொடங்கும். உலகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட அவகேடோ வகைகள் வளர்க்கப்படுகின்றன. புரதச்சத்துள்ள சில பழங்களுள் இதுவும் ஒன்று.

2018இல் உலகம் முழுவதும் 70 லட்சம் டன் அவகேடோ அறுவடை செய்யப்பட்டுள்ளது. 69 நாடுகளில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகிறது. கின்னஸ் உலக சாதனைகளின் படி, இதுவரை வளர்ந்ததிலேயே பெரிய அவகேடோ அமெரிக்காவில் வளர்ந்த 3 கிலோ எடை பழமே ஆகும்.

இம்மரங்கள் நீண்ட ஆயுள் கொண்டவை. மெக்சிகோவில் சில அவகேடோ மரங்கள் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்று மதிப்பிடப் பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us