தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஆழமா தோண்டாதீங்க!

ஆழமா தோண்டாதீங்க!

ஆழமா தோண்டாதீங்க!


PUBLISHED ON : ஜூலை 01, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகம் எங்கும் நிலத்தடி நீர் வற்றி விட்டது, அதை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டு வருகிறது. இதை எப்படிச் செய்ய வேண்டும் என்று முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரி திருநாவுக்கரசுவிடம் கேட்டோம்:

''மழைநீர் சேகரிப்பு முறையை ஒவ்வொரு குடியிருப்பும் கட்டாயமாகச் செய்ய வேண்டும். அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு உயரும். நம் பகுதியில் 10 செ.மீ. மழை பெய்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் 5 செ.மீ. மழை நீர் வீணாகும். மீதம் இருக்கும் 5 செ.மீ. மழை நீர் மண்ணுக்குள் போகும். நிலத்தடி நீர் மட்டம் இப்படித்தான் உயரும்.

நாம் வசிக்கும் பகுதியில் இருக்கும் மண் அமைப்பைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு மழைநீர் சேகரிப்பைச் செய்யவேண்டும்.

நிலத்தடி நீருக்கு 35 - 40 அடி வரை தோண்டினாலே போதும். 'மேற்புறத்து நீர் தாங்கி' என்று இந்த மட்டத்தைச் சொல்வார்கள். இதில்தான் தண்ணீர் ஊற்று எப்போதும் காணப்படும். ஆனால், பலரும் 120 அடி, 200 அடி என்றெல்லாம் தோண்டி, நீர் மட்டத்தையே நாசம் செய்கிறார்கள். அங்கே நல்ல தண்ணீர் எப்படிக் கிடைக்கும்?

இதைப் புரிந்துகொண்டு ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீரைக் காப்பாற்ற முடியும்.” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us