தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அறிவுரை வேண்டாம்; ஆலோசனை வேண்டும்!

அறிவுரை வேண்டாம்; ஆலோசனை வேண்டும்!

அறிவுரை வேண்டாம்; ஆலோசனை வேண்டும்!


PUBLISHED ON : ஆக 06, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல அனுபவப்பூர்வமான அறிவுரைகளை நாம் பெற்றோர், பெரியவர்களிடம் இருந்து தெரிந்து கொள்கிறோம். 'நாங்கள்லாம் அந்தக் காலத்துல...' என்று ஆரம்பித்தாலே பல மாணவர்களுக்குக் கிலி ஏற்பட்டுவிடும். ஆனால், அறிவுரைகளைக் கேட்டு நடப்பது பயனுள்ளதுதானே! அறிவுரைகளைப் பற்றி மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள். உங்களுக்கு அறிவுரைகளைக் கேட்கப் பிடிக்குமா என்று திருக்கழுக்குன்றம் வட்டம், கீரப்பாக்கம், பிளஸ்சிங்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம். அவர்களது பதிலைக் காணலாம்.

ஐ. ஜட்சன் சாம் டேனியல், 9ஆம் வகுப்பு

எப்படிப் படிக்கணும், மார்க் அதிகம் எடுக்க என்ன பண்ணணும்னு அப்பா, அம்மா சொல்வாங்க. அது எப்பவும் சொல்றதுதான். அதை நான் அறிவுரையா எடுத்துக்க மாட்டேன். அவங்க சொல்றதைக் கேட்டு நடப்பேன்.

அ. ஜனகன், 9ஆம் வகுப்பு

வீட்ல எப்போ பார்த்தாலும் படிபடின்னு சொல்வாங்க. தாத்தா, பாட்டி அறிவுரை சொல்வாங்க. ரொம்ப நேரம் டி.வி., போன் பார்க்கக்கூடாதுன்னு சொல்வாங்க. நம்ம நல்லதுக்குத்தானே சொல்றாங்கன்னு கேட்டுக்குவேன்.

பொ. அகஸ்டின், 9ஆம் வகுப்பு

எந்தப் பொருளையும் எடுத்த இடத்துல வைக்கணும், புத்தகங்களை நீட்டா வெச்சுக்கணும்னு வீட்ல சொல்வாங்க. இதெல்லாம் சாதாரணமா பேசும்போது சொல்றதுதான். ஆனா, கேட்கும்போது கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்யும். கொஞ்சம் நிதானமா யோசிச்சா, என்னோட நல்லதுக்குத்தான் சொல்றாங்கன்னு புரிஞ்சுப்பேன்.

சோ.அ.எஸ்தர் இன்பமலர், 8ஆம் வகுப்பு

எனக்கு அத்தை, பாட்டிதான் நிறைய அறிவுரை சொல்வாங்க. அம்மா எப்போவாச்சும்தான் அட்வைஸ் பண்ணுவாங்க. அவங்க பண்ற அட்வைஸ் ரொம்ப நாசூக்கா இருக்கும். என்னை குறைசொல்றா மாதிரி இருக்காது. ஆனால், நான் என்ன தப்பு செய்யறேன்னு எங்கம்மா ரொம்ப அழகா புரியவெச்சுடுவாங்க!

எஸ். கேரன், 9ஆம் வகுப்பு

அறிவுரைகள் கேக்கப் பிடிக்கும். அது நல்லதுன்னும் தெரியும். ஆனா எப்போ பார்த்தாலும் அறிவுரை சொல்லிக்கிட்டே இருக்காங்க. அதனால சில சமயம் வெறுப்பா இருக்கும். தொடர்ந்து சொல்லிகிட்டே இருக்காம முக்கியமான அறிவுரை மட்டும் சொல்லணும்.

நா.சா. சுபலட்சுமி, 9ஆம் வகுப்பு

எப்பவும் அட்வைஸ் பண்ணிட்டிருந்தா பிடிக்காது. வீட்ல அப்பா, அம்மா, அக்கா அட்வைஸ் பண்ணுவாங்க. படிப்பு விஷயத்துல சொல்ற எல்லா அறிவுரையும் கேட்டுக்குவேன். டி.வி. பாக்கறது, தூங்கறது இந்த விஷயத்துல அட்வைஸ் பண்ணா பிடிக்கலை. இருந்தாலும் கேட்டுக்குவேன்.

ச. ஆனந்தவள்ளி, 8ஆம் வகுப்பு

அறிவுரையைவிட ஆலோசனைகள் பிடிக்கும். இப்படிப் பண்ணு, இதனால் பலன் கிடைக்கும்னு தெளிவா வழிசொன்னா கேட்டுப்பேன். பல சமயங்களில் இப்படிப்பட்ட ஆலோசனைகள் வருவதில்லை. நான் வயசுல மூத்தவ, நீ சின்னவ, அதனால சொல்றதைக் கேளுங்கற மனப்பான்மையோடதான் அறிவுரைகள் வருது. அது மனசைக் காயப்படுத்துது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us