sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/அறிவியல் புரியாதா?

அறிவியல் புரியாதா?

அறிவியல் புரியாதா?


PUBLISHED ON : மார் 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2019


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

யார் சொன்னது? புரியவைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகிறது சென்னை கணித அறிவியல் கழகம். சபாக்களில் சங்கீதம் மட்டும்தான் கேட்க முடியுமா? அறிவியல் தகவல்களைக் கேட்டால் எப்படி இருக்கும்? இப்படி ஒரு எண்ணத்தோடு நடத்தப்படுவதுதான் 'சபாவில் அறிவியல்' (Science at Sabha). சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அரங்குகொள்ளாத கூட்டம். அறிவியலை ரசிக்க இத்தனை ஆர்வமா? நான்கு விஞ்ஞானிகள், நான்கு உரைகள். ஒவ்வொன்றும் மணிமணியாக இருந்தன.

நியூரான்களில் டிராஃபிக் விதிகள்

நம்ம ஊர் சாலைகளில் டிராஃபிக் ஜாமை சமாளிக்க நாம் என்ன செய்வோம்? ஒன்று, அவசரப்படாமல் பின்வாங்கி, நெருக்கடி குறைந்த பிறகு, வண்டி ஓட்டிக்கொண்டு போவோம். இரண்டாவது, வேறு சாலையை அல்லது வேறு ரூட்டைத் தேர்ந்தெடுப்போம்.

மூன்றாவது வழி ஒன்றும் இருக்கிறது;'ஸ்டார் வார்ஸ்' படங்களில் வருவது போல, அந்தரத்தில் குதித்துச் செல்வது. இது நமது உலகில் சாத்தியமில்லை. என்றாலும், அதுவும் ஒரு வழிதான். நமது நரம்பு மண்டலத்தில், ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு, நரம்பு செல்களான நியூரான்கள், நுண்ணிய பொட்டலங்களாக (Cargo) தகவல்களை அனுப்பிவைக்கும்.

இந்தப் பொட்டலங்கள் போகவேண்டிய பாதையில், ஆங்காங்கே புரத இழைகளும், முடிச்சுகளும் டிராஃபிக் ஜாமை ஏற்படுத்தும். இதனால், பொட்டலங்கள் நகர்வதில் தேக்கம் ஏற்படுகிறது.

அப்போது, டிராஃபிக் ஜாம்களை தீர்ப்பதற்கு நமக்கிருக்கும் அதே வழிமுறைகளைத்தான் நியூரான்களும் கடைப்பிடிக்கும். ஒன்று அந்தப் பொட்டலங்கள் அவசரப்படாமல் பின்வாங்கி, இடம் கிடைத்த பிறகு நகரும். இல்லையென்றால், ரூட்டையே மாற்றும், அல்லது மேல் நோக்கிக் குதித்து காலியிடத்துக்கு நகரும்.

- சந்தியா கௌஷிகா, TIFR, மும்பை.

புறாக்கூடும் எலட்ரான்களும்!

வரிசையாக புறாக்கூடுகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். எல்லாக் கூடுகளிலும் புறாக்கள் இருக்கின்றன. அப்படியானால், ஒரு கூட்டில் இருந்து இன்னொரு கூட்டுக்கு புறாக்களால் இடம்பெயர முடியாது. சில கூடுகள் காலியாக இருந்தால் தான் புறாக்களால் நகர முடியும்.

எல்லாக் கூடுகளிலும் புறாக்கள் இருப்பது என்பது, மின்கடத்தாத பொருட்களில் எலக்ட்ரான் நகராத அமைப்பை ஒத்தது. அதனால் மின்கடத்தல் நிகழாது.

காலிக் கூடுகள் உள்ள அமைப்பு, உலோகங்களின் எலக்ட்ரான் நகர்வை ஒத்தது. மின்கடத்தல் சாத்தியம்.

இன்னொரு நிலையைப் பார்ப்போம். எல்லாக் கூடுகளிலும் புறாக்கள் இருக்கின்றன; ஆனால், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கோணங்களில், முறுக்கிய நிலையில் (Twisted) இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.

அதாவது, மின்கடத்தாத பொருட்களில் எலக்ட்ரான்கள் வெவ்வேறு கோணங்களில் முறுக்கிக்கொண்டு இருந்தால் அவற்றின் மின் கடத்தும் தன்மை வேறுபடும். அந்தப் பொருட்களின் ஒரு தளத்தில் (Face) மின்கடத்தல் நடக்கும்; மற்ற பகுதி மின்கடத்தாத நிலையிலேயே இருக்கும்.

எலக்ட்ரான்களின் இந்தப் பண்புக்கு 'குவாண்டம் நிலை' என்று பெயர். குவாண்டம் கணினிகள் எனப்படும் அதிநவீன கணினிகளின் தகவல் கையாளும் முறைகளில் இந்தப் பண்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

- விஜய் ஷெனாய்,இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு.

ஸ்மார்ட் நகரங்கள் எப்படி இருக்க வேண்டும்?

மேலை நாடுகளின் ஸ்மார்ட் நகரங்கள் உள்ளன. அவற்றை உதாரணமாகக் கொண்டு, நமது நாட்டிலும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க முயற்சி செய்துவருகிறோம். ஆனால், அதே நடைமுறைகள் இங்கே பயன் தராது என்பதுதான் உண்மை.

உதாரணமாக, ஸ்வீடன் நகரம், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது. அந்த உத்தி இங்கு பலனளிக்காது. காரணம், நாம் போடும் குப்பையின் தன்மையே வேறு. அதனால், ஸ்வீடனின் உத்தி இங்கு உதாவது. நம்முடைய ஸ்மார்ட் நகரங்கள், நம்முடைய நகர அமைப்புகள் குறித்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய ஆய்வுகளில் நாம் ஈடுபடுவதில்லை. 2008- - 2015 காலகட்டத்தில் வெளியான, தன்னிறைவு பெற்ற நகரப்புறங்கள் பற்றிய 1000 முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளில், வெறும் பத்தே பத்து தான் இந்திய நகரங்களைப் பற்றி உள்ளன. சூழலியலை அடிப்படையாகக் கொண்டு நகர்ப்புறங்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

- ஹரிணி நாகேந்திரா, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், பெங்களூரு.

விளக்கம் சொல்லும் கோட்பாடுகள்! சிக்கலான அமைப்பின் அறிவியல் எத்தகையது?

கணித அறிஞர் ஜான் கான்வேயின் கேம் ஆஃப் லைஃப் (Game of life) எனும் சிந்தனை, ஸ்டீஃபன் ஹாக்கிங்கின், 'கோட்பாட்டு இயற்பியலின் முடிவு தெரிகிறதா? (Is the end of theoretical physics in sight?) என்ற உரை, இயற்பியலாளர் பிலிப் ஆண்டர்சனின், 'More is different' என்ற கட்டுரை போன்ற ஒரு டஜனுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் சிந்தனைகளை விளக்கி, அவற்றின் மூலமாக இந்தப் பிரபஞ்சத்தில் எப்படி சிக்கலான அறிவியல், பல அறிவியல்களின் ஒட்டுமொத்த தொகுப்பாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

சித்தபிரா சின்கா, சென்னை கணித அறிவியல் கழகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us