தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இரு மடங்கானது கல்வி உதவித் தொகை

இரு மடங்கானது கல்வி உதவித் தொகை

இரு மடங்கானது கல்வி உதவித் தொகை


PUBLISHED ON : நவ 06, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசுப் பணியாளர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதுநாள் வரை, ஆண்டு ஒன்றுக்கு ரூ. 30,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அது ரூ. 54,000 உயர்த்தி வழங்கப்படுவதாக, மத்திய அரசின் உத்தரவு தெரிவிக்கிறது. வழக்கமான குழந்தைகளைவிட, மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விச் செலவுகள் கூடுதலாக இருப்பதால், அத்தகைய பிள்ளைகளை உடைய மத்திய அரசு ஊழியர்களுக்கு, இரண்டு மடங்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்று ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்தது. அதன்படி, இப்போது இந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தாய், தந்தை இருவரும் மத்திய அரசுப் பணியாளர்களாக இருக்கும் பட்சத்தில், யாரோ ஒருவர் மட்டுமே இந்தச் சலுகைப் பயன்படுத்திக்கொண்டு, கல்விச் செலவைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us