PUBLISHED ON : ஏப் 04, 2016
அ நிறம் | அளவு
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பூஞ்சையை அனுப்ப, கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும், நாசாவும் திட்டமிட்டிருக்கின்றன. 'ஆஸ்பர்ஜில்லஸ் நிடுலன்ஸ்' (Aspergillus nidulans) என்ற பூஞ்சை வகை வரும் ஏப்ரல் 8ஆம் தேதி விண்வெளிக்குச் செல்ல இருக்கிறது. இந்தப் பூஞ்சை, கதிர் வீச்சு அதிகமான, ஈர்ப்பு விசை குறைவான நிலையில், மருத்துவக் குணம் கொண்ட புதிய வகை மூலக்கூறுகளை உற்பத்தி செய்யக்கூடியது. மருந்து உற்பத்தி ஆராய்ச்சிக்கு உதவும்.
