தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பூமி நமக்கு மட்டுமல்ல!

பூமி நமக்கு மட்டுமல்ல!

பூமி நமக்கு மட்டுமல்ல!


PUBLISHED ON : ஜன 06, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

2019ஆம் ஆண்டில் 110 புலிகள், 491 சிறுத்தைகள் இறந்துள்ளதாக, டில்லியைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. வேட்டையாடல், விபத்து ஆகிய இரண்டு முக்கிய காரணங்களால் புலிகளும், சிறுத்தைகளும் இறந்திருக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே 29 புலிகள் இறந்துள்ளன. அதையடுத்து, மகாராஷ்டிரத்தில் 22 புலிகள் இறந்திருக்கின்றன.

சில இடங்களில் நடந்த களஆய்வில் புலிகள், உடல் உறுப்புகளுக்காக வேட்டையாடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், காட்டின் இடப்பற்றாக்குறையால் புலிகளுக்கு இடையே சண்டை வந்து இறந்துள்ளன. 2019இல் புலிகளின் எண்ணிக்கை அதிகமானது மகிழ்ச்சி தரும் செய்தி. அதேநேரம், அவற்றின் பாதுகாப்பிற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டவில்லை. புலிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது, காட்டின் பரப்பளவு அதிகரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், புலிகள் இடத்திற்காகவும், உணவிற்காகவும் சண்டையிட்டு இறக்க அதிக வாய்ப்புண்டு. அதேபோல், சில புலிகள் சாலை விபத்தில் இறந்து போயிருக்கின்றன.

இந்தியாவில் கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, 2,967 புலிகள் உள்ளன. அதில் நாம் 110 புலிகளை இழந்துவிட்டோம்.

புலிகளின் எண்ணிக்கை நம்மிடம் இருந்தாலும், சிறுத்தைகளின் மொத்த எண்ணிக்கை இன்னும் சரியாகத் தெரியவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் இரயில், சாலை விபத்துகளில் சிறுத்தைகள் பலியாகி இருக்கின்றன. 2010 முதல் 2019 வரையான காலகட்டத்தில் விபத்துகளால் இறந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மகாராஷ்டிரத்தில் மட்டும் 22 சிறுத்தைகள் இறந்துள்ளன.

நாட்டின் பல்வேறு இடங்களில் சிறுத்தைகள் உணவிற்காக காட்டின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. சிறுத்தைகளின் வருகை, மக்களின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காட்டின் உணவுச் சங்கிலியில் பிரச்னை ஏற்படும் போதோ, தேவையான உணவு கிடைக்காவிட்டாலோ, காட்டுயிர் - மனிதர்களுக்கு இடையிலான மோதலைக் கட்டுப்படுத்த முடியாது. பூமியின் எல்லா பகுதிகளும் மனிதர்கள் மட்டுமே வாழ்வதற்கானது என்ற சிந்தனையை மாற்றி அமைத்தால் மட்டுமே, வனவிலங்குகளைப் பாதுகாக்க முடியும்.

2018ஆம் ஆண்டைவிட, 2019ஆம் ஆண்டு பூனைக் குடும்பங்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020இல் நிச்சயம் இவற்றுக்கான தீர்வைத் தேடாவிட்டால், இந்தியாவின் பெரிய பூனைகளுக்கான எதிர்காலம் கேள்விக்குறியதாகிவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us