PUBLISHED ON : ஏப் 02, 2018

இந்தக் கோடை விடுமுறையில் நீங்கள் செய்து பழக, வாரம் ஒரு புதிய செயல்முறைப் பயிற்சியை அளிக்கிறோம். கற்றுக்கொள்ள, விளையாட, ரசிக்க என இவை உங்களுக்குப் பயன்படும். இவற்றைக்கொண்டு உங்கள் பொழுதைப் பயனுள்ளதாகச் செலவழிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
* காட்போர்ட் அட்டையால் ஆன குழாய் - 3
* மூன்று குழாய்களும் முறையே 6.8 செ.மீ., 6.4 செ.மீ.,6 செ.மீ. விட்டமும், 30 செ.மீ. நீளமும் இருக்க வேண்டும்.
* குழி-குவி லென்ஸ் (concave-convex lense) 70 செ.மீ. குவிமையம் (focal length), 6.7 செ.மீ. விட்டம் உடையது.
* குழி லென்ஸ் (concave lense)- 4 செ.மீ. குவி மையம், 18 செ.மீ. விட்டம் உடையது.
* லென்ஸுகளைப் பொருத்த வட்ட வடிவிலான அட்டை
செய்முறை
மூன்று அட்டைக் குழாய்களையும் ஒன்றுக்குள் ஒன்றாகப் பொருத்த வேண்டும்.
2 1.8 செ.மீ. விட்டமுள்ள லெனஸ் தொலைநோக்கியில் கண் வைத்துப்பார்க்கும் பகுதியில் பயன்படுவது. இதை வட்ட வடிவ லென்ஸ் தாங்கியில் ஒட்ட வேண்டும்.
லென்ஸ் ஒட்டப்பட்ட வட்ட வடிவ அட்டையின் வெளி விளிம்பில் பசை தடவி, குழாயின் குறுகலான வாய்ப் பகுதியில் ஒட்ட வேண்டும். இது, தொலைநோக்கியைப் பயன்படுத்தும்போது, நம் கண் அருகில் வரக்கூடிய பகுதி.
பெரிய லென்ஸான குழிகுவி லென்ஸின் விளிம்பில் பசை தடவ வேண்டும். லென்ஸின் குவிமையப் பகுதி, தொலைநோக்கியின் வெளிப்புறம் அமையுமாறு அட்டைக் குழாயின் மற்றொரு வாய்ப் பகுதியில் ஒட்ட வேண்டும். இந்தப் பகுதிதான் தொலைநோக்கியில் பார்க்கும் பொருட்கள் பக்கமிருக்கும்.
தாங்கிகள் ஏதுமில்லாத எளிய தொலைநோக்கி தயார். இதை நீங்கள் உங்கள் கைகளால் கவனமாக ஏந்திக் கொண்டு தொலைவிலுள்ள பொருட்களைப் பார்க்கப் பயன்படுத்தலாம்.
நன்றி: arvindguptatoys.com
