தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/முட்டைச் செடி

முட்டைச் செடி

முட்டைச் செடி


PUBLISHED ON : ஜூலை 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முட்டைச் செடி தெரியுமான்னு கேட்டால் நாம் எல்லோருமே திருதிருவென விழிப்போம். காரணம் அதுக்கு நம் ஊரில் வேறு பெயர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில்தான் அதை முட்டைச் செடி (எக் பிளான்ட் - Egg plant) என்கிறார்கள். நாம் அதை கத்தரிக்காய் (Brinjal) என்கிறோம்! பிரிட்டன், பிரஞ்சு மக்கள் ஆபர்ஜின் (Aubergine) என்கிறார்கள். இத்தாலி நாட்டவர்க்கு இது மெலன்ஜினா (Melanzana). அவர்கள் மொழியில் 'பைத்திய ஆப்பிள்' என்று அர்த்தம்!

கத்தரியின் தாயகம் இந்தியா. இதில் 770 வகை உள்ளது.

கத்தரியை காயாகப் பயன்படுத்தினாலும் அது பழவகையைச் சேர்ந்தது. அதிலும் பெர்ரி வகையை சேர்ந்தது. சீனாதான் கத்தரி உற்பத்தியில் முதலிடம். அதற்கடுத்து இந்தியா, எகிப்து, துருக்கி, மற்றும் ஜப்பான் நாடுகள் உள்ளன.

முற்காலத்தில் சீனப் பெண்கள் ஊதா நிறக் கத்தரிக்காயில் இருந்து சாயம் தயாரித்து தங்கள் பற்களை பாலிஷ் செய்துகொண்டார்கள்.

கத்தரிக்கு 'காய்களின் ராஜா' என்ற செல்லப் பெயர் உண்டு. காரணம் இதில் நார்ச்சத்து அதிகம்.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. குரோஜனிக் அமிலம் (Chlorogenic acid) அதிகம் உள்ளது. இந்த அமிலம் புற்று நோய் எதிர்ப்பானாகும். கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் செய்யும்.

இதில் மிகக் குறைந்த அளவே கொழுப்பு, உப்புச் சத்து உள்ளது. வைட்டமின்கள் சி, கே, பி6 ஆகியவை உள்ளன. மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் போன்ற தாதுக்களும் இதில் அடங்கி உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us