தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இயற்கையை வழிபடுவோம்!

இயற்கையை வழிபடுவோம்!

இயற்கையை வழிபடுவோம்!


PUBLISHED ON : ஜூலை 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக இயற்கைப் பாதுகாப்பு தினம் ஜூலை 28

இன்றைய சூழலில் சுத்தமான காற்றும் நீரும் நமக்குக் கிடைக்கிறதா? வீடுகளிலும் பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரைக் குடிப்பதால் நீங்கள் “ஆம் கிடைக்கிறது” என்று சொல்லலாம், அதை 'இல்லை' என்றுதான் மறுக்கவேண்டும்.

நீர், நிலம் இந்த இரண்டுமே இயற்கைத் தன்மையை இழந்து வருகின்றன. இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர்கள் காடு, மலைகளை வாழ்த்தியும் மரம், செடி கொடிகளைப் பேணியும் அவற்றை தெய்வமாக வழிபட்டார்கள். ஆனால், பிளாஸ்டிக் உலகத்தில் இருக்கும் நாம் இயற்கைச் சூழலைக் காக்கத் தவறிவிட்டோம்.

மனித இனத்தின் பெருங்கொடை இயற்கை வளங்கள்தான்! மனிதன் இயற்கையைச் சார்ந்துதான் வாழவேண்டும். நீர் நிலைகளில் மணல் கொள்ளை வனங்களில் மரம் வெட்டுதல், விளைநிலங்களை ஆக்கிரமித்தல் போன்ற நடவடிக்கைகளால் இயற்கை வளங்களின் பரப்பளவு குறைந்து, மனித இனம் மட்டும் பெருகி வருகிறது. அதிகரித்து விட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, காற்றை மாசுபடுத்தும் எரிபொருட்கள், தொழிற்சாலைகளின் கழிவு நீர் போன்றவை புவி மண்டலத்தை வெப்பமடையச் செய்கின்றன.

பசுமையான சோலைகள், காடுகள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், கடலோர நீர் வளம் போன்றவை மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று. இனி நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்! இயற்கையைக் காக்க மரம் நட வேண்டும்; நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமும் இயற்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

* உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

* இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கத்தில் 'உலக இயற்கைப் பாதுகாப்பு தினம்' கொண்டாடப்படுகிறது.

* நாட்டின் வளங்களில் மூன்றில் ஒரு பங்கு வன வளம் இருக்க வேண்டும். 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ௨4 சதவீதமாக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us