உள்ளடக்கத்திற்கு செல்ல

பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் பதினெண்கீழ்கணக்கு நூல்கள்
பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் பதினெண்கீழ்கணக்கு நூல்கள்
PUBLISHED ON : செப் 19, 2016

அ நிறம் | அளவு
பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பிரெஞ்சு, ஜெர்மன் மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 14 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தப் பணிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இதன் மூலம், தமிழ் மொழியின் வளம் பற்றிய விழிப்புணர்வு உலகளவில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. கொரிய மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு பணி முடிவடைந்து, விரைவில் வெளியிடப்பட உள்ளது.
