PUBLISHED ON : செப் 19, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளஸ் 2 பாடங்களை டிசம்பருக்குள் முடிக்க, அரசு பள்ளிகளை கல்வித் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது முதலாம் பாக பாடங்கள் முடிக்கப்பட்டு, காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக வரும் டிசம்பர் மாதத்திற்குள், இரண்டாம் பாகத்தையும் நடத்தி முடித்துவிட்டால், அரையாண்டு தேர்வுக்குப் பின் பொதுத் தேர்வு வரை தினசரி திருப்புதல் தேர்வுகள் நடத்தி, மாணவர்களைப் பொதுத் தேர்வுக்கு தயார் செய்ய முடியும் என, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

