தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/யானை முக எலி

யானை முக எலி

யானை முக எலி


PUBLISHED ON : அக் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யானை ஷ்ரூவ்

ஆங்கிலப் பெயர்கள்: 'எலிபண்ட் ஷ்ரூவ்' (Elephant Shrew), 'ஜம்பிங் ஷ்ரூவ்' (Jumping Shrew)

அறிவியல் பெயர்: 'ரின்கோசியோன் சிர்நேய்' (Rhyncocyon Cirnei)

அளவு: 10 செ.மீ. முதல் 30 செ.மீ. வரை

எடை: 50 கிராம் முதல் 500 கிராம் வரை

ஆயுட்காலம்: 2 முதல் 5 ஆண்டுகள்

ஓடும் வேகம்: மணிக்கு 13 கி.மீ.

'யானை ஷ்ரூவ்' என்பது எலி இனத்தைச் சேர்ந்தது. 'மேக்ரோஸ்செலிடிடே' (Macroscelidae) குடும்பத்தைச் சேர்ந்த இந்தச் சிறிய பாலூட்டி உயிரினம், ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது. இதன் முகஅமைப்பு யானையைப் போலவே இருக்கும். இவற்றில் இருபதுக்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள், புல்வெளிகள் போன்ற பகுதிகளில் இவற்றைக் காணமுடியும். முயல்களைப் போல குதித்துக்குதித்து வேகமாக ஓடும் திறன் உடையவை. முன் கால்கள் குட்டையாகவும், பின்னங்கால்கள் நீண்டும் காணப்படும். மூக்குப் பகுதி நீண்டு யானையின் தும்பிக்கை போல இருக்கும். உடல் முழுவதும் ரோமங்களால் போர்த்தப்பட்டிருக்கும்.

கருப்பு, பழுப்பு, வெள்ளை, சாம்பல் என, வெவ்வேறு நிறங்களில் இவை காணப்படுகின்றன. பூச்சி, புழு, வௌவால் போன்றவையே இவற்றின் உணவு. மிகவும் சுறுசுறுப்பான இவை, பகல் வேளைகளில் உணவு தேடி அலைந்து கொண்டிருக்கும். மண்ணில் வளை தோண்டி வசிப்பிடத்தை உருவாக்கும். ஜோடியாக வாழும் தன்மை உடைய இவற்றின் கர்ப்ப காலம் 2 மாதங்கள். ஆண்டுக்கு ஒரு குட்டி ஈனும். பாம்பு, பல்லி, பறவை போன்றவற்றால் இவை வேட்டையாடப்பட்டு உண்ணப்படுகின்றன.

- அ.ஆனந்தி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us