PUBLISHED ON : டிச 25, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகரம் பெருக காடுகளை அழிப்பதால் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இப்போது, சுமத்ரா காண்டாமிருகம் அழியும் நிலையில் உள்ளதாக, விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாலூட்டிகளான இக்காண்டாமிருகங்கள், வட கிழக்கு இமயமலை அடிவாரம் தொடங்கி, சீனா, தாய்லாந்து, மியான்மர், வியட்நாம், இந்தோனேசியா வரை பரவி இருந்தது. இன்று 250க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இவை இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன் கொம்புக்காக தொடர்ந்து வேட்டையாடப்படுகின்றன. தற்போது சுமத்ரா தீவுகளில் மட்டும் அதிகம் காணப்படும் இவ்வகை காண்டாமிருகங்களை, இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் நேச்சர் கன்சர்வேஷன் (IUCN) என்னும் அமைப்பு அழியும் நிலையிலுள்ள விலங்குகள் பட்டியலில் சேர்த்துள்ளது.