PUBLISHED ON : டிச 25, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்விட்சர்லாந்து நாட்டில் இருக்கும் மலைப்பாதைகளில் பயணம் மேற்கொள்வது கொஞ்சம் சவாலானதுதான். இங்கிருக்கும் மலைக் கிராமமான ஸ்டூஸ்பஹுக்கும் பள்ளத்தாக்கு நகரமான ஸ்விட்சுக்கும் இடையில் உள்ள 1,300 மீட்டர் தூரத்தைக் கடக்க (4,300 அடி உயரம்) 1933ஆம் ஆண்டு முதல், ரோப் கார் இயங்கி வருகிறது. நொடிக்கு 10 மீட்டர் வேகத்தில்தான் இக்கார்கள் இயங்கும். இந்தப் புதிய வகை ரோப்கார்கள் செங்குத்துப் பாதையில் பயணிக்கும்போது, அதற்கு ஏற்றார்போல, பின்னால் வளைந்து நிலைப்படுத்திக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இதில் பயணிப்பவர்களுக்கு எவ்விதமான அசௌகரியமும் இருக்காது என்கிறார்கள். 110 டிகிரி சாய்வு நிலையில் பயணிக்கும் ரோப் கார் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார் இப்பணியை மேற்கொண்ட பொறியாளர்களில் ஒருவரான ரெய்ன்ஹோல்ட்.