sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சூழலைக் காக்கும் அமைப்பு

/

சூழலைக் காக்கும் அமைப்பு

சூழலைக் காக்கும் அமைப்பு

சூழலைக் காக்கும் அமைப்பு


PUBLISHED ON : பிப் 12, 2018

Google News

PUBLISHED ON : பிப் 12, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வருகிறது இந்த அமைப்பு. உலகத்தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் பிரச்னைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளைக் காணவும், அதனால் ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் உதவுவதே இதன் நோக்கம்.

உலக அளவில் முதலாவதும், பெரியதுமான சூழலியல் சார்ந்த அமைப்பு இது. 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகருக்கு அண்மையில் உள்ள 'க்லாண்டு'(Gland) என்ற பகுதியில் அமைந்துள்ளது. 140 நாடுகளில் உள்ள 108 அரசு அமைப்புகள், 766 அரசு சாரா சங்கங்கள், 81 சர்வதேச அமைப்புகள், சுமார் 11,000 துறை வல்லுநர்கள் இதில் உறுப்பினர்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, உலகின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கப் பல்வேறு நடவடிக்கைகளை இவ்வமைப்பு மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் சிவப்புப் பட்டியலை வெளியிடுகிறது. ஓர் உயிரியல் இனம் அழிந்துவிட்டது அல்லது அழியும் தறுவாயில் இருக்கிறது என்று எச்சரிக்கை செய்யும் பட்டியலே, 'சிவப்புப் பட்டியல்'. இவற்றில் முக்கியமான நிலைகள் இவை:

* இனஅழிவு நிகழ்ச்சியால் அற்றுவிட்ட இனம் (EX) - Extinct

* இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW) - Extinct in the Wild

* மிகவும் அருகிய இனம் (CR)- Critically endangered

* அருகிய இனம் (EN) - Endangered

* அழிய வாய்ப்புள்ள இனம், பாதுகாப்பற்றவை (VU) - Vulnerable

* அச்சுறு நிலையை நெருங்கியுள்ள இனம் (NT) Near Threatened

* போதிய கவனம் இல்லாத இனம் (LC) - Least Concern

* தரவுகள் போதாது (DD) - Data Deficient

* மதிப்பீடு செய்யப்படவில்லை (NE) - Not evaluated

சிவப்புப் பட்டியல் மூலமாக, உடனடியாகக் காப்பாற்ற வேண்டிய இனங்களைக் கண்டறிய முடியும். பின்னர், சூழலியல் ஆய்வாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடங்க முடியும்.

- அ.லோகமாதேவி






      Dinamalar
      Follow us