sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

செம்பிறை என் அடையாளம்

/

செம்பிறை என் அடையாளம்

செம்பிறை என் அடையாளம்

செம்பிறை என் அடையாளம்


PUBLISHED ON : பிப் 12, 2018

Google News

PUBLISHED ON : பிப் 12, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன் கரடி (Honey Bear)

வேறு பெயர்கள்: 'மலாய் சன் பியர்' (Malay Sun Bear), 'டாக் பியர்' (Dog Bear)

உயிரியல் பெயர்: 'ஹெலார்க்டோஸ் மலாயனஸ்' (Helarctos Malayanus)

சூரியக் கரடி, தென் கிழக்கு ஆசியாவின் அடர்த்தியான, வெப்பமண்டல வனப்பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய வகைக் கரடி. பெரும்பாலும் மரங்களின் மீது காணப்படும். இது கரடி இனங்களிலேயே அளவில் சிறியது. அடர்த்தியான ரோமங்களுடன் தோல் மினுமினுப்பான கருப்பு நிறத்தில் காணப்படும். மூக்கு, கழுத்துப் பகுதிகள் பழுப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். கழுத்துக்குக் கீழ்ப்பகுதியில் ஆரஞ்சு நிறத்தில், 'U' 'O' வடிவத் தோற்றத்தில் செம்பிறை இருப்பது இதன் தனித்துவ அடையாளம். காதுகள் குட்டையானவை. 25 செ.மீ. நீள நாக்கை உடையது. தேன் கூட்டிலிருந்து பூச்சிகளையும், தேனையும் பிரித்து எடுப்பதற்கு, நீளமான நாக்கைப் பயன்படுத்தும்.

கால்கள் வலுவானதாகவும், கால் நகங்கள் நீண்டு வளைந்து கூர்மையாகவும் இருக்கும். மரங்களின் உச்சியில் ஏறி, தேன் கூடுகளை பறித்துத் தின்னும். பழம், தேன், பூச்சி, எலி போன்ற சிறிய உயிரினங்களே இதன் பிரதான உணவு. புலி, பாம்பு, ஆட்கொல்லிப் பறவைகள் போன்றவை இவற்றின் எதிரிகள். இவற்றின் இனப்பெருக்க காலம் மூன்று முதல் எட்டு மாதங்கள். ஒரு தடவைக்கு மூன்று குட்டிகள் வரை போடும். குட்டிகள் வசிப்பதற்காக தரையில் பள்ளம் தோண்டி மெல்லிய மரக்கிளைகளால் ஆன மெத்தை போன்ற படுக்கையை ஏற்படுத்தும்.

மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் போன்ற இடங்களில் உள்ள அடர்த்தியான வனப்பகுதிகளில் இவை அதிகம் வாழ்கின்றன.

- ப.கோபாலகிருஷ்ணன்






      Dinamalar
      Follow us