தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/காயங்களை ஆற்றும் அரிசி!

காயங்களை ஆற்றும் அரிசி!

காயங்களை ஆற்றும் அரிசி!


PUBLISHED ON : பிப் 12, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அம்மான் பச்சரிசி

ஆங்கிலப் பெயர்கள்: 'ஆஸ்த்மா வீட்' (Asthma Weed), 'காமன் ஸ்பர்ஜ்' (Common Spurge), 'கேட்'ஸ் ஹேர்' (Cats Hair)

தாவரவியல் பெயர்: 'ஈபோர்பியா ஹிர்டா' (Euphorbia Hirta)

வேறு பெயர்கள்: சித்திரப்பாலாடை (தமிழ்), நெலாப்பாலை (மலையாளம்), நனபாலு (தெலுங்கு), அச்சேடிடா (கன்னடம்), பாரா துதி (இந்தி)

அம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகை. இதன் பேரைக் கேட்டதும் இது அரிசியோ என்று நினைக்க வேண்டாம். ஈரமுள்ள இடங்களில் தானே வளரும் சிறு செடி இது. 'ஈபோர்பியாசியே' (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. தரிசு நிலம், சமவெளி, வயல்வெளிகளில் இவற்றைக் காணலாம். மிகச்சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும். கொடி வகையும் உண்டு. இதன் கொடி மூன்று அங்குலம் நீளமாக தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும்.

செடி 50 செ.மீ. உயரம் வரை வளரும். ஆண்டு முழுவதும் வளரக்கூடிய தாவரம். எதிர் அடுக்கில் கூர்நுனிப் பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளை உடையது. இலைகள் பச்சை, சிவப்பு நிறங்களில் சொரசொரப்பாக இருக்கும். இலைகள் துவர்ப்பு, இனிப்புச் சுவையுடையது. உடலுக்குக் குளிர்ச்சி தரும். தாவரத்தின் எந்தப் பகுதியைக் கிள்ளினாலும் பால் வடியும். பூக்கள் தொகுப்பாக கணுக்களில் அமைந்திருக்கும். பூக்கள் வெண்ணெய் நிறத்திலும், காம்புகளுடனும் காணப்படும்.

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இந்தச் செடி, தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. வித்தியாசமான பெயரைக் கொண்ட இது, வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.செடியின் இலை, தண்டு, பால், பூ ஆகியவை நோய் தீர்க்கும் அருமருந்து. முகப்பரு, பித்த வெடிப்பு, காயங்களை ஆற்றுதல் ஆகியவற்றிற்கு, மருந்தாகப் பால் உதவுகிறது. தாவரத்தின் பிற பாகங்கள் சருமநோயைத் தீர்த்தல், காயங்களை ஆற்றுதல், வயிற்றுப்பூச்சியை அகற்றுதல் ஆகியவற்றிற்கும் மருந்தாகிறது.

வகைகள்

பெரியம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி, வயம்மாள் பச்சரிசி

- கி.சாந்தா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us