PUBLISHED ON : அக் 21, 2024
ஒவ்வோர் ஆண்டும், ஆங்கில அகராதியில் புதிய சொற்கள் சேர்ந்துகொண்டே இருக்கும். இந்த 2024ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜ் அகராதியில் புதிதாக, 3,200 சொற்களும் சொற்றொடர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய சொற்கள், இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் புழங்குவனவாக இருக்கின்றன. படிப்படியாக அவை அவர்களுடைய அன்றாட பயன்பாட்டு மொழியில் சேர்ந்துவிடுகின்றன. இந்த ஆண்டு, கேம்பிரிட்ஜ் அகராதியில் சேர்ந்துள்ள இரண்டு சொற்கள் இவை:
1. தி இக் (The ick)
அர்த்தம் : திடீரென்று ஒருவர் செய்த ஏதோ ஒன்றினால், அவரையோ, அந்த அம்சத்தையோ பிடிக்காமல் போய்விடுவது.
எடு: I used to like Kevin, but seeing him in that suit gave me the ick.
2. பூப் (boop)
அர்த்தம் : அன்பினாலோ, விளையாட்டாகவோ, மூக்கிலோ, தலையிலோ லேசாகத் தட்டுவது அல்லது தொடுவது.
எடு: She greeted me with a friendly boop on the head