தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஃபெடரர்: த டென்னிஸ் டெரர்!

ஃபெடரர்: த டென்னிஸ் டெரர்!

ஃபெடரர்: த டென்னிஸ் டெரர்!


PUBLISHED ON : ஆக 08, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜிம்மி கானர்ஸ், இவான் லெண்டில், அண்ட்ரே அகாஸி, பீட் சாம்ப்ராஸ் இவர்கள் எல்லாம் டென்னிஸ் சாம்ராஜ்யத்தின் ஸ்டார்கள் என்றால், சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் சூப்பர் ஸ்டார்!

அடுத்தடுத்த தோல்விகளைப் புன்னகையுடன் கடந்து வெற்றி பெற்ற இவர், சிறுவனாக இருந்தபோது கால்பந்து, கோல்ஃப், டென்னிஸ் என எல்லா விளையாட்டுகளிலும் ஒரு ரவுண்டு வந்திருக்கிறார்.

நான்கு வயதில் இருந்தே இவருடைய கனவு நாயகனாக இருந்தவர் போரிஸ் பெக்கர்! அவரே சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் தோல்வி அடைவதையும் பார்த்திருக்கிறார் ரோஜர். அதனால், 'நான் ஜெயிப்பேன், எப்போதேனும் தோற்றுவிட்டாலும், அதில் இருந்து மீண்டு வந்து ஜெயித்துக் காட்டுவேன்!' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டுதான் ஆடுகளத்தில் முதன்முதலாகக் காலையே வைத்தார்.

ஜூனியர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பட்டங்களை விம்பிள்டனில் வென்றபோது, உலகம் இவரை பூதக்கண்ணாடி வைத்து உற்றுப் பார்த்தது. தனக்கு மிகவும் பிடித்த வீரரான, பீட் சாம்ப்ராஸ் உடன் 2001ல் போட்டியிட்டு, தோற்கடித்து, கம்பீரமாக வலம் வந்த அந்த டெரர் ஸ்டைல் இருக்கிறதே... அதைப் பார்த்த ரசிகர்களுக்கு அன்று தீபாவளிதான்!

அங்கிருந்து ஆரம்பமான அந்த அதிரடி, 7 விம்பிள்டன், 5 அமெரிக்க ஓபன், 4 ஆஸ்திரேலியா ஓபன், 1 பிரெஞ்சு ஓபன் என்று மொத்தம் 17 கிராண்ட் ஸ்லாம் உலக சாதனை! கூடவே 300 வாரத்துக்கு மேல் உலகின் நம்பர் ஒன் வீரர் என்கிற பெருமை...

'புல் தரையின் தேவன்' என்று புகழப்பட்ட ஃபெடரர் 2008 அமெரிக்க ஓபனில் ரஃபேல் நடாலிடம் வீழ்ந்தார். கொஞ்சம் அழுகை, அதிக அமைதியுடன் மைதானத்தைவிட்டுக் கிளம்பினார். அதற்கு அடுத்த வருடத்தில் விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் என இரண்டையும் வென்ற பிறகே மெலிதாகப் புன்னகைத்தார்.

ஃபெடரர் என்னும் சிறந்த விளையாட்டு வீரனுக்குள் சிறந்த மனிதனும் இருக்கிறான். புற்றுநோயாளியான, பியட்ரிஸ் டினோகோ என்ற 17 வயது அமெரிக்க ரசிகை, 'ஃபெடரரை சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை' என்று கடிதம் எழுதியிருந்தாள். அவளைச் சந்திக்க வந்த ஃபெடரர் கண்ணீரை அடக்கிக்கொண்டு, அவளுடன் சிரித்துப் பேசி, தான் ஆடும் போட்டியைக் காணக் கூட்டிச் சென்று அவளை உற்சாகப்படுத்தினார்.

விளையாட்டு தவிர, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள குழந்தைகளுக்குத் தன்னால் முடிந்த சேவைகளையும் செய்துவருகிறார்.

* கடந்த 1998ல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் காலடி வைத்த இவர், இதுவரை 1080 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

* முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில், தங்கம் (2008), வெள்ளி (2012) வென்றிருக்கிறார். காயம் காரணமாக, ரியோவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us