உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜூன் 26, 2023
அ நிறம் | அளவு
ஒரு பண்ணையில் ஆடுகளும் கோழிகளும் இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை, 4 மடங்கு தலைகளின் எண்ணிக்கையைவிட 40 குறைவு. எனில், கோழிகளின் எண்ணிக்கை என்ன?
அ) 40 ஆ) 30 இ) 10 ஈ) 20
களத்தில் கணக்கு: ஈ) 20
ஆடுகளின் எண்ணிக்கையை x என்க. கோழிகளின் எண்ணிக்கையை y என்க.
ஆடுகளுக்கு நான்கு கால்கள் என்பதால், 4x. அதேபோல், கோழிகளுக்கு இரண்டு கால்கள் என்பதால், 2y என்று கருதலாம்.
ஆக, கேள்வியில் கொடுக்கப்பட்ட தகவலின்படி,
4x + 2y = 4(x+y) - 40
=> 4x + 2y = 4x+4y - 40
=> 4x + 2y -4x -4y = - 40
=> - 2y = - 40
y=20
எனவே, கோழிகளின் எண்ணிக்கை = 20.
