தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/குறியீடுகளைக் கண்டறிந்தவர்கள்

குறியீடுகளைக் கண்டறிந்தவர்கள்

குறியீடுகளைக் கண்டறிந்தவர்கள்


PUBLISHED ON : ஜூன் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தேன். ஒரு மாணவன் எழுந்து “நாம் கணிதத்தில் பயன்படுத்தும் கூட்டல் (+), கழித்தல் (-) மற்றும் சமன் (=) குறியீடுகளை யார் அறிமுகப்படுத்தினார்கள்? இதை நாம் எப்பொழுதிலிருந்து பயன்படுத்துகிறோம்?” என்று கேட்டான்.

வித்தியாசமாகச் சிந்தித்த அந்த மாணவனைப் பாராட்டிவிட்டு, விடையளித்தேன்.

“கி. பி. 1489ஆம் ஆண்டிலிருந்து கூட்டல் (+), கழித்தல் (-) குறியீடுகளையும், கி.பி. 1557ஆம் ஆண்டிலிருந்து சமன் (=) குறியீட்டையும் நாம் பயன்படுத்துகிறோம்.

கூட்டல் (+) குறியீட்டை வழங்கியவர் 'நிகோல் ஓரெஸ்மே' (Nicole Oresme) என்ற ஃபிரெஞ்சு கணித அறிஞர்.

கழித்தல் (-) குறியீட்டை வழங்கியவர் 'ஜோஹனெஸ் விட்மேன்' (Johannes Widmann) என்ற ஜெர்மன் கணித அறிஞர்.

சமன் (=) குறியீட்டை வழங்கியவர் 'ராபர்ட் ரெகார்ட்' (Robert Recorde) என்ற இங்கிலாந்து கணித அறிஞர்.

இக்குறியீடுகளை இங்கிலாந்து நாட்டவரே முதன் முதலில் பயன்படுத்தினார்கள்” எனக் கூறினேன்.

கேள்வி கேட்ட மாணவனுக்கு மட்டுமல்ல, எல்லா மாணவர்களுக்கும் சந்தோஷம்!

- இரா. செங்கோதை, கணித ஆசிரியை, பை கணித மன்றம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us