உள்ளடக்கத்திற்கு செல்ல

பிளாஸ்டிக் கப் பயன்பாட்டிற்கு தடை செய்த முதல் நாடு
பிளாஸ்டிக் கப் பயன்பாட்டிற்கு தடை செய்த முதல் நாடு
PUBLISHED ON : அக் 03, 2016

அ நிறம் | அளவு
பிளாஸ்டிக் கப், தட்டு பயன்பாட்டிற்கு பிரான்ஸ் அரசு முழுமையாக தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல அதிரடி நடவடிக்கைகளை பிரான்ஸ் நாடு எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த நாட்டில் 50 லட்சம் பிளாஸ்டிக் கப்கள் குப்பையாக வீசி எறியப்பட்டன; அதில் 1 விழுக்காடு மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டதாக, அந்த நாட்டின் சுற்றுச்சூழல், சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 'பிளாஸ்டிக் கப் மற்றும் தட்டிற்கு தடை விதித்த முதல் நாடு' என்கிற பெருமையை பிரான்ஸ் பெறுகிறது.
