PUBLISHED ON : மார் 26, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தத்துவ மேதையான காரல் மார்க்ஸின் 200வது பிறந்தநாள், கம்யூனிஸ்ட் கட்சியினரால் உலகம் முழுவதும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. மார்க்ஸின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் விதமாக, ஜெர்மனியில் அவர் பிறந்த ட்ரையர் நகரில் ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
அந்நகரில் இருக்கும் எல்லா போக்குவரத்து சிக்னல் விளக்குகளிலும் காரல்மார்க்ஸின் உருவம் ஒளிர்கிறது. பாதசாரிகள் செல்லலாம், செல்லக்கூடாது என்பதற்கான விளக்குகளில் மார்க்ஸ் உருவம் தெரிகிறது. சிவப்பு விளக்கு எரியும்போது, இரு கைகளையும் விரித்தபடி மார்க்ஸ் நிற்கிறார். பச்சை விளக்கு எரியும்போது, அவர் நடப்பது போன்ற உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான முயற்சி, அந்நகரின் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

