உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 26, 2018

அ நிறம் | அளவு
இராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடியில், காற்றாலை அமைக்க மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தித்துறை முடிவு செய்துள்ளது. ரூ.300 கோடியில், இங்கு 5 இடங்களில் அமைக்கப்பட உள்ள காற்றாலைகள் மூலம், சுமார் 6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாகவே மத்திய அரசு, தனுஷ்கோடி, கம்பிப்பாடு, அரிச்சல்முனை போன்ற பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. தற்போது, அதிநவீன லேசர் கருவி மூலம், இப்பகுதியில் வீசும் காற்றின் வேகத்தை அளவிடும்பணி தொடங்கி உள்ளது. இப்பணி ஒரு மாதத்துக்கு நடைபெறும். தொடர்ந்து, இதன் முடிவுகள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு, காற்றாலை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு விரிவுபடுத்தும்.
