தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அயல்மொழி அறிவோம்!: ஜெர்மன் தெரிஞ்சா ஸ்வீடிஷ் ஈசி!

அயல்மொழி அறிவோம்!: ஜெர்மன் தெரிஞ்சா ஸ்வீடிஷ் ஈசி!

அயல்மொழி அறிவோம்!: ஜெர்மன் தெரிஞ்சா ஸ்வீடிஷ் ஈசி!


PUBLISHED ON : மே 28, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹுரெ ஹரெ தூ தட்? (Hur har du dat?) இது என்ன மொழி?

ஸ்வீடிஷ். அந்த மொழியில 'நீங்க எப்படி இருக்கீங்க'ன்னு கேட்டேன். இந்த வாரம், ஸ்வீடிஷ் மொழி கத்துக்கிற மாணவர்களைச் சந்திச்சோம். அக்ஷய், தினேஷ் இருவருமே இன்னும் சில மாதங்களில் மேற்படிப்புக்காக ஸ்வீடன் போகப் போறாங்க. அவங்க எப்படி கத்துக்கிறாங்க? பேசினோம்:

ஸ்வீடனுக்குப் போக என்ன காரணம்?

அக்ஷய்: உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு அங்க நிறைய கல்லூரிகள் இருக்கு. எனக்கு பி.எச்டி. பண்ணனும், அதனால அங்க போறேன்.

தினேஷ்: எனர்ஜி, மின்சாரம் பத்தின பல ஆராய்ச்சிகள் அங்கதான் நடக்குது. இன்னும் பல புதிய விஷயங்களைப் படிக்க அங்க வாய்ப்பு அதிகம். அதனால போறேன்.

ஸ்வீடிஷ் கத்துக்க எப்படி இருக்கு?

அக்ஷய்: எனக்கு முன்னாடியே ஜெர்மன் மொழி தெரியும். அதனால ஒரு சில விஷயங்களைப் புரிஞ்சுக்க முடியுது.

தினேஷ்: எனக்கு எந்த அயல்மொழியும் தெரியாது. ஆனாலும், ஸ்வீடிஷ் கத்துக்கிறதுல எந்தச் சிக்கலும் இல்ல. ஓரளவுக்கு எழுத்தைக் கூட்டி வாசிக்கக் கத்துக்கிட்டேன்.

ஸ்வீடிஷ் மொழியை, எந்த மொழியோட தொடர்புபடுத்தி படிக்க முடியும்?

அக்ஷய்: ஜெர்மன் மொழி தெரிஞ்சிருந்தா, சில ஸ்வீடிஷ் வார்த்தைகளின் உச்சரிப்பையும் ஒலியையும் சீக்கிரமா கத்துக்கலாம். நோர்வேஜிய மொழியோட தொடர்பு இருக்கிறதா, எனக்கு முன்னாடி படிச்சவங்க சொன்னாங்க.

தினேஷ்: எந்த அயல்மொழியும் தெரியாம கத்துக்கும்போது, எல்லாமே புதுசா இருக்கும். குறிப்பா உச்சரிப்பு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். வேற ஐரோப்பிய மொழிகள், அதாவது டச்சு, பின்னிஷ் போன்ற மொழிகள் தெரிஞ்சா இன்னும் சீக்கிரமா கத்துக்கலாம்னு நினைக்கிறேன்.

எழுத்துகள், இலக்கணம் எப்படி இருக்கும்?

அக்ஷய்: ஆங்கில எழுத்துகளைப் போலத்தான் இதோட வரிவடிவமும் இருக்கும்.

தினேஷ்: ஆங்கில இலக்கணத்துக்குத் தொடர்பே இல்லை. இந்த மொழியில நாற்காலி, பென்சில், பேனா எல்லாத்துக்கும் ஆண்பால், பெண்பாலைக் குறிப்பிடணும்.

இதுல எவ்வளவு படிநிலைகள் இருக்கு?

அக்ஷய்: மொத்தம் ஆறு படிநிலைகள். நாங்க ஏ1,ஏ2 முடிச்சா, மீதியை அங்கபோய் படிப்போம். எதுவுமே தெரியாம போறதுக்கு அடிப்படைகளைக் கத்துக்கிறது நல்லது.

உயிரியல், இயற்பியல், மின்சாரவியல் போன்ற பல துறைகளில் ஆராய்ச்சி மாணவர்களாக இந்தியர்கள் உள்ளார்கள்.

ஆறு மாதத்துக்குள் மொழியைக் கற்றுக்கொள்ளலாம்.

தொடர்புக்கு : முனைவர் இஷ்ரத் நஸ் அரா

எண். 5, கல்கி நகர், அரும்பாக்கம், சென்னை - 106

அலைபேசி: 98410-40855 www.brighttrainingcentre.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us