PUBLISHED ON : செப் 04, 2017
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊபர் என்ற சர்வதேச வாடகைக் கார் சேவையளிக்கும் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, அதில் இணைந்துள்ள 4.5 லட்சம் ஓட்டுனர்களுக்கும் இலவச ஆயுள் காப்பீடு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐசிஐசிஐ லம்பார்ட் எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள ஊபர், செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. ஓட்டுனர்கள் மரணமடைந்தால் ரூ.5 லட்சமும், சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் காப்பீட்டுத் தொகையாக வழங்கவுள்ளது.

