sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சுதந்திரம் எனது பிறப்புரிமை

/

சுதந்திரம் எனது பிறப்புரிமை

சுதந்திரம் எனது பிறப்புரிமை

சுதந்திரம் எனது பிறப்புரிமை


PUBLISHED ON : ஜூலை 17, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 17, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலகங்காதர திலகர்: 23.7.1856

ரத்தினகிரி, மகாராஷ்டிரம்


“சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி, அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதையே என் நாடு என்னிடம் எதிர்பார்க்கிறது. அதற்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்றார் பாலகங்காதர திலகர்.

பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று, சமஸ்கிருதத்திலும், கணிதத்திலும் சிறந்து விளங்கினார். சட்டம் படிக்க சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்தபோது, அந்தக் கல்லூரி முதல்வர் 'கணிதம் படித்தால், நல்ல எதிர்காலம் உனக்கு அமையும்' என்றார். அதை மறுத்த திலகர், 'தேசப்பற்று மிகுந்த வழக்கறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. எனவே, நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்' எனக் கூறினார். சட்டம் படித்து, தியாகிகளுக்காக வாதாடி, அவர்களைச் சிறையிலிருந்து மீட்ட பெருமை திலகருக்கு உண்டு.

மக்களுக்குச் சுதந்திர வேட்கையை ஏற்படுத்த, நண்பர்களுடன் இணைந்து, 1881ல் மராட்டி மொழியில் 'கேசரி', ஆங்கிலத்தில் 'மராட்டா' ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தினார். ஆங்கில அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை கேசரி பத்திரிகை வெளியிட்டது. பத்திரிகையின் அபார விற்பனை, ஆங்கிலேயருக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது. ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதால், 4 மாத சிறைத் தண்டனை பெற்றார். அதுதான், அவரின் முதல் சிறை அனுபவம்.

'நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால்தான், சுதந்திரம் விரைவில் கிடைக்கும்' என்றார். 1907ல், நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மிதவாதிகள், தீவிரவாதிகள் என, அக்கட்சி இரு பிரிவுகளாகப் பிரிந்தது. திலகரின் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள், அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாகச் செயல்பட்டனர். இதனால் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

வங்கப் பிரிவினை எதிர்ப்பு, சுதேசிப் பொருட்களுக்கு ஆதரவு, அந்நியப் பொருட்கள் எரிப்பு என, பல போராட்டங்கள் இவர் தலைமையில் நடந்தன. 'திலக் மகராஜ்', 'லோகமான்ய' என்று மக்களால் போற்றப்பட்டார். 'சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்' என்று இறுதி மூச்சுவரை முழங்கினார், இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை திலகர்.






      Dinamalar
      Follow us